பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62


நீர்மங்களை விலக்குவது.

56. இயல்பு வெப்பநிலையும் அழுத்தமும் என்றால் என்ன?

இயல்பு வெப்பநிலை 273"°, அழுத்தம் 76 செ.மீ. NTP.

57. அனைத்துக் கரைப்பான் என்பது எது? நீர்.

58. சில கரைப்பான்கள் கூறு.

பெட்ரோல், கார்பன் இரு சல்பைடு, ஆக்சாலிகக் காடி

59. கையில் வண்ணக்குழைவு பட்டுள்ளது. அதைப் போக்கும் கரைப்பான் யாது?

மண்ணெண்ணெய்.

60. கரைசலை விரைவாக்கும் வழிகள் யாவை?

1. கரைபொருளைப் பொடி செய்து நீரில் போடுதல், 2. குலுக்குதல். 3. வெப்பப்படுத்தல்.

61. கரைவை என்றால் என்ன?

இதில் கரைபொருளும் கரைப்பானும் திட்டமாகச் சேர்ந்திருக்கும்.

62. கரைதிறன் என்றால் என்ன? குறிப்பிட்ட வெப்பநிலையில் 100 கிராம் கரைப்பானை நிறைவுள்ள கரைசலாக்குவதற்குத் தேவையான கரைபொருளின் கிராமின் எடை.

63. கரைவை நாட்டம் என்றால் என்ன?

கரைப்பானிலுள்ள மூலக்கூறுகளைக் கரைசலிலுள்ள அயனிகள் கவர்தல்.

64. கரைப்பான் பகுப்பு என்றால் என்ன?

ஒரு சேர்மத்திற்கும் கரைப்பானுக்கும் இடையே நடைபெறும் வினையில் சேர்மம் கரைதல்.

65. சால்வே முறை என்பது யாது?

அம்மோனியா சோடா முறை. சோடியம் கார்பனேட்டை உருவாக்கும் தொழில்முறை.

66. கொதிநிலை மாறாக் கரைசல் என்றால் என்ன?

நீரில் அய்டிரோகுளோரிகக் காடிக்கரைசல். இது இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை