பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


மாற்றமும் இல்லை.

67. நீரற்ற கரைசல் என்றால் என்ன?

கரைப்பான் நீராக இல்லாத கரைசல். இக்கரைப்பான் கனிமமாகவே கரிமமாகவோ முன்னணு சார்ந்ததாகவோ

68. திட்டக்கரைசல் என்றால் என்ன?

பருமனறிபகுப்பில் பயன்படும் செறிவு தெரிந்த கரைசல்.

69. சுல்லட் கரைசல் என்றால் என்ன?

பொட்டாசியம் அயோடைடும் துத்தக்குளோரைடும் அயோடினும் சேர்ந்த கரைசல்.

70. வெடிதூள் என்றால் என்ன?

வீட்டுக்கரி, கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட் சேர்ந்த வெடிகலவை.

71. உருகுகலவை என்றால் என்ன?

நீரற்ற பொட்டாசியம் கார்பனேட்டு, சோடியம் கார்பனேட்டு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை.

9. படிகம்

1. படிகம் என்றால் என்ன?

திண்மப் பொருள். இதன் அணுக்கள் திட்டமான வடிவியல் கோலத்தில் இருக்கும்.

2. படிகமாதல் என்றால் என்ன?

படிகம் உண்டாகும் முறை.

3. படிகவியல் என்றால் என்ன?

படிகங்களின் அமைப்பு, வடிவம், பண்புகள் ஆகியவற்றை ஆராயுந்துறை.

4. படிகத்தொகுதி என்றால் என்ன?

படிகங்கள் தம் அலகு அணுக்களின் வடிவ அடிப்படையில் பிரிந்திருத்தல்.

5. படிகமாதல் நீர் என்றால் என்ன?

பலபடிகங்களில் வேதிமுறையில் நீர் சேர்ந்திருத்தல் - வெப்பப்படுத்தல் மூலம் இதை நீக்கலாம். படிகம் தன்