உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


45. பேரியம் சல்பேட்டு என்றால் என்ன?

வெண்ணிறத் திண்மம். மேற்பரப்புப் பூச்சுகளில் நிறமி விரிவாக்கி. மற்றும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது.

46. பொட்டாசியத்தின் பயன்கள் யாவை?

இது ஒரு கார உலோகம். எல்லா உயிர்ப் பொருள்களிலும் உள்ளது. உலோகக் கலவைகள் செய்யவும், ஒளிமின்கலங்கள் செய்யவும் பயன்படுவது. இதன் உப்புகள் உரங்கள்.

46(அ) பொட்டாசியம் புரோமைடின் பயன்கள் யாவை?

வெண்ணிறப் படிகம். வலித்தணிப்பி, புகைப்படக் கலையில் பயன்படுவது.

46(ஆ) பொட்டாசியம் குளோரேட்டின் பயன்கள் யாவை?

நேர்த்தியான வெண்ணிறக் குச்சிகள். ஆக்சிஜன் ஏற்றி. தீப்பெட்டிகள் செய்யவும் வாணவேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுவது.

47. பொட்டாசியம் சயனைடின் சிறப்பென்ன?

வெண்ணிறப் படிகம், கொடிய நஞ்சு, மின்முலாம் பூசவும் பொன்னையும் வெள்ளியையும் பிரிக்கவும் பயன்படுவது.

48. பொட்டாசியம் இரு குரோமேட்டின் பயன்கள் யாவை?

கிச்சிலி சிவப்புநிறப் படிகம். ஆக்சிஜன் ஏற்றி, சாயத் தொழில் உற்பத்தியிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது.

49. பொட்டாசியம் அய்டிராக்சைடின் பயன் யாது?

எரிபொட்டாஷ் மென்குளியல் சவர்க்காரங்கள் செய்யப் பயன்படுவது.

50. பொட்டாசியம் அயோடைடின் பயன் யாது?

வெண்ணிறப்படிகம். புகைப்படக் கலையில் பயன்படுவது.

51. பொட்டாசியம் பர்மாங்கனேட்டின் பயன்கள் யாவை?

கரிய ஊதா நிற ஊசிவடிவப் படிகம். தொற்றுநீக்கி. ஆக்சிஜன் ஏற்றி. கரிமவேதிஇயலில் பேயர்ஸ்