பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71



பெயரால் அமைந்தது லூயிசைட் ஆகும். மஞ்சள்நிறக் கனசதுரக் கனிமம். கால்சியம் டிட்டோனியம் ஆண்டிமொனேட்டு என்பது வேதிப்பெயர்.

62. லாரென்சியம் என்றால் என்ன?

மீ அணுஎண் கொண்ட கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஒரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

63. இது எதிலிருந்து பெறப்படுகிறது?

கலிபோர்னியத்தைச் சிதைத்துப் பெறப்படுவது.

64. வெண்துத்தம் என்றால் என்ன?

துத்தநாகச் சல்பேட்

65.சீனவெள்ளை என்றால் என்ன? பயன்கள் யாவை?

முத்துவெள்ளை. துத்தநாக ஆக்சைடு. வண்ணக் குழைவிலும் பூசுமருந்திலும் பயன்படுவது.

66. துத்தநாகப் புளோரோ சிலிகேட்டின் பயன்கள் யாவை?

மரப்பாதுகாப்புப் பொருள். பூஞ்சைக்கொல்லி.

67. துத்தநாக ஆக்சைடின் பயன்கள் யாவை?

வெண்ணிற நார்ப்பொருள். மட்பாண்டங்களுக்கு மெருகேற்ற, சீனவெள்ளை துத்தநாகக் களிம்புகளில் புரைஎதிர்ப்பி.

68. இதன் பழைய பெயர் என்ன?

மெய்யறிவாளர் சம்பளம்.

69. துத்தச்சல்பேட்டின் பயன்கள் யாவை?

நீரில் கரையா வெண்ணிறப் படிகம். மின்முலாம் பூசுவதிலும் வெள்ளை வண்ணக் குழம்பிலும் பயன்படுவது.

70. துத்தநாகத்தின் பயன்கள் யாவை?

கடின உலோகம். நாகமுலாம் பூசவும் வெண்கலம் செய்யவும் பயன்படுவது.

71. துத்தநாகத்தின் முதன்மையான தாது எது?

சிங்க பிளண்டு, துத்தநாகச் சல்பைடு.

72. துத்தநாகக் கார்பனேட்டின் பயன் யாது?