பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83


ஆகியவற்றில் பயன்படுவது. பருமனறி பகுப்பில் வினையாக்கி.

194. உயர்விரைவு எஃகு என்றால் என்ன?

உயர்விரைவு கடைசல் எந்திரங்களில் கருவிகளை வெட்டப் பயன்படும் எஃகு.

195. வார்ப்பிரும்பு என்றால் என்ன?

இரும்பு உலோகக் கலவை. 2-5% கரியும் மற்ற மாசுகளும் உள்ளன. இதிலிருந்து எஃகு கிடைப்பது. இது குழாய்கள், அடுப்புகள், விளையாட்டுப் பொருள்கள் முதலியவை செய்யப் பயன்படுவது.

196. மென்னிரும்பு என்றால் என்ன? பயன் யாது?

ஆல்பா இரும்பு. கரி குறைவாக உள்ளது. காந்த ஆற்றல் நிலைத்திராது. வரிச்சுற்றுகளில் பயன்படுவது.

197. தேனிரும்பின் பயன்கள் யாவை?

மிகத்துய இரும்பு. கரி இல்லாதது. வார்ப்பிலிருந்து பெறப்படுவது. சங்கிலிகள், கம்பி, ஆணிகள் செய்யப் பயன்படுவது. தகடாக்கலாம், கம்பியாக்கலாம்.

198. கசடு என்றால் என்ன?

உலோகத் தாதுக்களைப் பிரிக்கும்பொழுது உண்டாகும் கழிவு. இளக்கியினால் உண்டாவது. மிதப்பதால் எளிதில் வெளியேறக் கூடியது.

199. யூரப்பியம் என்றால் என்ன?

வெள்ளிநிற உலோகத் தனிமம். எட்ரிய யூரேப்பிய ஆக்சைடு கலவையில் முதன்மையாகப் பயன்படுவது. இந்த ஆக்சைடுகள் தொலைக்காட்சித் திரைகளில் சிவப்புப் பாசுவரமாகப் பயன்படுவது.

200. சமாரியம் என்பது என்ன? அதன் பயன் யாது?

வெள்ளிநிறத் தனிமம். உலோகவியல், கண்ணாடித் தொழில், அணுத்தொழில் ஆகியவற்றில் பயன்படுவது.

201. சோடியம் அசைடின் பயன் யாது?

நிறமற்ற படிகம். வெடிமருந்துகளில் பயன்படுவது.

202. சோடியம் பெனிசோயேட்டின் பயன்கள் யாவை?

நீரில் கரையும் வெண்ணிறத்தூள். உணவுப் பாதுகாப்புப்