பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84


 பொருள். நச்சுத்தடை

203. சோடியம் இருகார்பனேட்டின் பயன்கள் யாவை?

வெண்ணிறத் திண்மம். ஆப்பச்சோடா. அமிலம் நீக்கி. நுரைக்கும் பானங்களில் பயன்படுதல்.

204. சோடியம் கார்பனேட்டின் பயன்கள் யாவை?

சலவைச்சோடா. வெண்ணிறப் பொருள் எரிசோடா, கண்ணாடி, சவர்க்காரம் ஆகியவை செய்யப் பயன்படுவது.

205. எம்முறையில் இது பெரிய அளவில் செய்யப்படுகிறது?

சால்வே முறையில்.

206. சோடியம் குளோரேட்டின் பயன்கள் யாவை?

நிறமற்ற கரையும் படிகம். நச்சுத்தடை ஆக்சிஜன் ஏற்றி. வெடிமருந்துகளில் பயன்படுவது.

207. எப்சம் உப்பு என்றால் என்ன?

மக்னீசியம் சல்பேட் பேதிமருந்து, நிறம் நிறுத்தி.

208. தேலியத்தின் பயன்கள் யாவை?

மென்மையான சாம்பல் நிற உலோகம். நச்சுத்தன்மையுள்ளது. ஒளிமின்கலங்கள், அகச்சிவப்பு உணர்கருவிகள், குறைந்த உருகுநிலைக் கண்ணாடிகள் முதலியவற்றில் பயன்படுகின்றது.

209. வெள்ளியக் குளோரைடின் பயன்கள் யாவை?

ஒளிபுகும் திண்மம், ஒடுக்கி, நிறம் நிறுத்தி.

210. வெள்ளிய ஆக்சைடின் பயன்கள் யாவை?

வெள்ளியச் சாம்பல். ஒடுகள், கண்ணாடிகள், உலோகம் ஆகியவற்றிற்கு மெருகேற்றப் பயன்படுவது.

211. வெள்ளியச் சல்பைடின் பயன் யாது?

பொன்னிற வண்ணக் குழைவு செய்யப் பயன்படுவது.

212. இதன் சிறப்புப் பெயர் என்ன?

ஓவியப் பொன். நீரில் கரையா மஞ்சள்தூள். வேறு பெயர் செதில் வடிவப் பொன்.

213. டைடேனியத்தின் பயன்கள் யாவை?

சாம்பல்நிற மாறுநிலைத்தனிமம். கப்பல்கள், வானவூர்திகள் முதலியவை செய்யப் பயன்படுவது.