பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88


வானொலிக் குழாய்கள் செய்வதிலும் பயன்படுவது.

241. மக்னீசியத்தின் பயன்கள் யாவை?

வெண்ணிறக் காரமண் உலோகம். கூசொளி குமிழ்களிலும் பல கரிமச் சேர்மங்கள் செய்யவும் சிலிக்கனைப் பிரிக்கவும் பயன்படுவது.

242. மக்னீசியம் கார்பனேட்டின் பயன் யாது?

வெண்ணிறத்துள். மருந்துகளில் கடினத்தன்மையைப் போக்கப் பயன்படுவது.

243. மக்னீசியம் குளோரைடு என்றால் என்ன?

நீரற்ற உப்பு. நெசவுத்தொழிலில் பயன்படுவது.

244. மக்னீசியம் அய்டிராக்சைடின் பயன் யாது?

வெண்ணிறத்துள. கழிவுப் பாகிலிருந்து சர்க்கரையைப் பிரிக்கப் பயன்படுவது.

245. மக்னீசியம் ஆக்சைடின் பயன்கள் யாவை? வெண்ணிறத்தூள். காடித்தன்மையைத் திருத்தும் மருந்துகள் செய்யவும் உலைகளில் வெப்பத்தடைக் கரைகள் அமைக்கவும் பயன்படுவது.

246. மக்னீசியம் சல்பேட்டின் பயன்கள் யாவை?

திட்டமான ஒளிபுகும் படிகம். பேதிமருந்து. நிறம் நிறுத்தி.

247. பல்லாடியம் என்பது யாது? பயன்கள் யாவை?

மாறுநிலை வெண்ணிற உலோகம். அய்டிரஜன் செலுத்தும் வினைகளில் ஊக்கி. அணிகலன்கள் செய்யவும் உலோகக் கலவைகள் செய்யவும் பயன்படுவது.

248. நியோபியம் என்பது யாது?

சாம்பல் நிற உலோகம். அரிமானத் தடையைத் தடுப்பது.

249. நிக்கல் என்றால் என்ன?

வெள்ளிபோன்ற வெண்ணிறக் காந்த உலோகம். மின்முலாம் பூசுவதிலும் கறுக்கா எஃகு செய்வதிலும் பயன்படுவது.

250. நிக்கல் அசெட்டேட்டின் பயன் யாது?

கரையக் கூடிய பசுமை நிறப்படிகம். நிக்கல் முலாம்