பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94


செம்பும் துத்தநாகமும் சேர்ந்த கலவை. எஃகுகளில் பயன்படுவது. மாங்கனீஸ் எஃகு.

29. மக்னானின் என்றால் என்ன?

செம்பு, மாங்கனிஸ், நிக்கல் சேர்ந்த உலோகக் கலவை. மின்தடைச் சுருள்களில் பயன்படுவது.

30. ரோஸ் உலோகத்தின் அமைப்பும் பயனும் யாவை?

உருகக்கூடிய உலோகக் கலவை. பிஸ்மத், காரீயம், வெள்ளியம் சேர்ந்தது. தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுவது.

31. எலின்வார் என்றால் என்ன?

ஓர் உலோகக் கலவை. எஃகுவின் வாணிபப் பெயர். நிக்கலும் குரோமியமும் சேர்ந்தது. காடிகாரங்களுக்கு மயிரிழைச் சுருள்கள் செய்யப் பயன்படுவது.

32. டச்சு பொன் என்றால் என்ன?

உலோகக் கலவை. செம்பும் துத்தநாகமும் சேர்ந்தது. பொன்னுக்கு மாற்று.

33. உட் உலோகம் என்பது என்ன?

ஓர் உலோகக் கலவை. பிஸ்மத், வெள்ளியம் காட்மியம் சேர்ந்த கலவை. தீப்பாதுகாப்புச் சுருளில் பயன்படுவது.

34. பாஸ்பர் வெண்கலம் என்றால் என்ன?

ஓர் உலோகக் கலவை. இதில் செம்பு, வெள்ளியம், பாசுவரம் உள்ளன. பல்லிணைச் சக்கரங்களில் பயன்படுவது.

12. அலோகம்

1. அலோகத் தனிமங்கள் யாவை?

மின் எதிர்த் தனிமங்கள். இவை கரி(திண்மம்), புரோமின் (நீர்மம்), நைட்ரஜன் (வளி) என்னும் நிலையில் இருக்கும்.

2. கனிமம் என்றால் என்ன?

இயற்கையில் கிடைக்கும் தாது. சிறப்பு வேதித்தன்மை கொண்டது. படிக அமைப்புள்ளது. எ-டு. இங்குலிகம்.

3. காக்கைப்பொன் என்பது என்ன?