பக்கம்:அறிவியல் விருந்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே அம்புலிப் பயணம்

  • பறக்கச் சிறகிருந்தால்

வெண்ணிலாவே-உன்றன் பக்கம்வந்து சேருவேனே வெண் ணிலாவே!" என்பது மனிதன் காணும் கனவினைக் குறிப்பிடும் கவிஞனின் குரல், பறக்கச் சிறகில்லையே என்றிருந்த ஏக்கம் வானவூர்தி கண்டறியப்பெற்றதால் ஒழிந்தது. இந்த ஊர்தியில் பறந்துசென்று மனிதன் பனிக்கடல் சூழ்ந்த வடதுருவத்தைக் கண்டுவிட்டான்; பனிக் கண் டத்தின் நடுவிலுள்ள தென்துருவத்தையும் பார்த்து விட்டான். இராக்கெட்டுகள் கண்டறியப்பெற்ற பிறகு இன்று வானவெளியையும் துருவத் தொடங்கிவிட்டான். பல செயற்கைத் துணைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிப் பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டுமுள் வான். மேலும் மேலும் உயரச் சென்று முதலில் அம் புவியை எட்டிப் பிடித்துவிட முயன்று 'வெற்றியும் கண்டுவிட்டான். விண்வெளிப் பயணத்தில் அம்புலிதான் முதன் முதலாக மக்கள் மனத்தைக் கவர்ந்தது. காரணம் என்ன? அறிவிய லறிஞர்கள் கூறும் காரணம் ஒருபுறமிருக்க, நாம் கருதும் காரணம் இது; வானவீதியில் கண்களுக்கு இனிமையையும் களைத்த உள்ளங்கட்குக் களிப்பையும் இதயத்திற்கு இன்பக் கிளர்ச்சியையும் அளித்துப் பேரெழிலுடன் இலங்கி வருவது வெண்ணிலா. பால்மனம் மாறாப் 1. கவிமணி: மலரும் மாலையும்.வெண்ணிலா=15,