பக்கம்:அறிவியல் விருந்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣器 அறிவியல் விருந்து 'அம்புலிப் பயணத்’ திட்டத்திணை வகுக்கும் பொறிஞர்கள்" பூமியின் கவர்ச்சி ஆற்றல், அம்புலியின் கவர்ச்சி ஆற்றல், கதிரவனின் கவர்ச்சி ஆற்றல் இவற்றால் ஏற்படும் இழுவிசைகளைப்பற்றி ஆராய் கல்வேண்டும். மேலும் இவர்கள், வேறு பலவற்றுடன், புவியின் ឯរណ៏ மண்டலம், புவி தன் அச்சில் சுழலும் சுழற்சி, புவியைச் கற்றி அம்புலி செல்லும் அயனப் பாதை ஆகியவற்றையும் கருதவேண்டும். ஒரு பொருள் மேல்நோக்கி வீசியெறியப் பெறுமாயின் அது பூமியின் கவர்ச்சி ஆற்றலின் காரணமாக மீண்டும் பூமியை வத்தடைகின்றது. அங்ங்னமே அம்புலியை நோக்கிச் சுடப்பெறும் செயற்கைத் துணைக்கோள்' விநாடிக்கு 8 கி.மீ. வீதம் (மணிக்கு 29 ஆயிரம் கி. மீ வீதம்) செல்லும்பொழுது பூமியின் கவர்ச்சி ஆற்றலுடன் சமனிலையாகிவிடுகின்றது. இந்த வேகத்தில் அது கீழே விழாது; அது புவியைச் சுற்றி அயனப் பாதையில்’ சென்று கொண்டிருக்கும். புவியினின்றும் 320 கி. மீ.க்கு மேல் 950 கி.மீ. வரையிலும் கூடக் காற்றுத் துகள்கள் உள்ளன. இக் காற்றுத் துகள்கள் இந்தச் செயற்கைத் துணைக்கோளின் வேகத்தை மட்டுப்படுத்தும். 960 கி.மீ. க்கு அப்பால் காற்றின் உராய்வே' இல்லாத வெளியில் இத்தகைய செயற்கைத் துணைக்கோள் கால வரையறையின்றி அயனப் பாதையில் செல்லவேண்டும். செயற்கைத் துணைக்கோளின் வேகம் விநாடிக்கு எட்டு கி.மீ. குக் கீழ் குறைக்கப்பெற்றால் அது புவியின் கவர்ச்சி ஆற்றலால் கவரப்பெற்றுக் கீழே விழுந்துவிடும். அத்தகைய ஒரு பொருள் பூமியின் வளிமண்டலத்தினூடே விழும் 9. Gejfr/òs;#456îr-Engineers. 10. Gspanora Gsm sit-Satellite. 11. அயனப் பாதை-Orbit, !2. *-rirâal-Friction.