பக்கம்:அறிவியல் விருந்து.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் # 17 பொழுது அது காற்றின்மீது உராய்வதால் ஏராளமான அளவு வெப்பம் உண்டா கின்றது. அப்பொருள் பூமியின் மீது விழுவதற்குள் இந்த வெப்பம் அதனை முற்றிலும் எரித்துவிடுவதற்குக் காரணமாகலாம். விநாடியொன்றுக்குக் கிட்டத்தட்ட 11.2கி.மீ வேகத் தில் (கிட்டத்தட்ட மணிக்கு 40 ஆயிரம் கி.மீ வேகத்தில்) ஒரு பொருள் அல்லது செயற்கைத் துணைக்கோள் புவிக்கு அப்பால் செல்லும்பொழுது அது புவியின் கவர்ச்சி ஆற்றலின் இழுப்பினின்றும் தப்பித்துவிடும்; அஃதாவது, அது புவியின் இழுப்பின் எல்லையைக் கடந்து விடும்; இந்த வேகம் விடுபடும் நேர்வேகம" என்று வழங்கப்பெறு கின்றது. இத்தகைய செயற்கைத் துணைக்கோள் மதி மண்டலத்திற்கும் பயணம் செய்தல்கூடும். புவிக்கு அருகில் வளிமண்டலத்தின் உராய்வு மிக அதிகமாக இருப்பதால் பூமிக்கு 160 கி.மீ. அல்லது அதற்குக் குறைந்த உயரத்தில் ஒரு துணைக்கோளின் ஆயுள் ஒரு மணி அல்லது அதற்கும் குறைந்த காலம் ஆகும் என மதிப்பிடப்பெற்றுள்ளது. 360 கி.மீ. உயரத்தில் ஒரு துணைக்கோள் பல வாரங்கள் வரை அயனப் பாதையில் தங்கலாம். 480 கி. மீ. அல்லது அதற்கும் மேற்பட்ட உயரத்தில் மிகமிகக் குறைந்த காற்றே இருப்பதால் அஃது அதிக உராய்வினைத் தருதல் இயலாது. ஆகவே, அங்கு ஒரு துணைக்கோள் ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம்வரையில் அயனப் பாதையில் தங்குகின்றது. ஆனால், அம்புலியை நோக்கி அனுப்பப்பெறும் ஒரு துணைக்கோள் அதன் பயண காலம் முழுவதும் விடுபடு நேர்வேகத்தை நிலையாகப் பெற்றிருக்கவேண்டிய தேவை இல்லை. பெரும்பான்மை யான தூரத்தில் (கிட்டத்தட்ட பத்தில் ஒன்பது பாகம்) பூமியின் கவர்ச்சி ஆற்றல் துணைக்கோளை இழுத்தும்

  1. 3, g3Gus Goff Gastã-Escape velocity.