பக்கம்:அறிவியல் விருந்து.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 12; மதியில் வளிமண்டலம் இல்லையாதலின், அதனை நோக்கிச் செல்லும் இராக்கெட்டு விமானத்திற்கு வேறு இராக்கெட்டு ஆற்றலைத் தந்து நிறுத்தி அது மதியில் விழுந்து சிதையா வண்ணம் பாதுகாக்கப்பெறுதல்வேண்டும். இராக்கெட்டு விமானம் அம்புலியை நெருங்கும் பொழுது அதன் மீது பொருத்தப்பெற்றுள்ள சிறிய பக்கவாட்டு இசாக்கெட்டு களைச் சுட்டு அதன் வேகம்தணிக்கப்பெறுகின்றது. அம்புலி யில் வளிமண்டலம் இருப்பின் அதுவே விமானத்தின் மீது உராய்ந்து அதன் வேகத்தைத் தடுத்துவிடும் என்பது ஈண்டு அறியத்தக்கது. அம்புலியைச் சென்றடைவதற்குக் سلسلة تقيتُ سفينة மூன்று நாட்களும் அங்கிருந்து திரும்புவதற்கு மூன்று நாட்களும் ஆகலாம் என்றும் மதிப்பிடப்பெற்றுள்ளது. மதியை ஆராய்வதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் என்று வைத்துக்கொண்டால் அம்புவிப் பயணம் நிறைவு பெறுவதற்குப் பத்து நாட்கள் ஆகும் என்று கருதலாம். இத்தகைய அருஞ்செயல் வெற்றியுடன் நிறைவுபெறுவ தற்கு உணவு, நீர், பானவகைகள், காற்று இவற்றைக் கொண்டுசெல்வதில் யாதொரு பெரிய பிரச்சினையும் இருத்தல் கூடாது. அம்புலியின் எடை பூமியின் எடையைவிட 82 மடங்கு குறைவாக உள்ளது. ஆகவே, அம்புவியினின்றும் பூமிக்குத் திரும்பும் ஓர் இராக்கெட்டு அல்லது விண்வெளி விமானத் திற்குரிய விடுபடு நேர் வேகமும் விநாடிக்கு 2.4 கி.மீ. வேகமே ஆகும்; புவியினின்று கிளம்பும்போது தேவைப்பட்ட விநாடிக்கு 112 கி. மீ. வேகம் இப்பொழுது தேவை இல்லை. மேலும், அம்புலியில் வளிமண்டலமே இல்லாததால் அங்கிருந்து திரும்பும் பயணம் மிகவும் எளிதாகின்றது.