பக்கம்:அறிவியல் விருந்து.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

剑 வேளியீட்டால் இளைஞர்கட்குப் பயன்படும் என்று grథ அரிய நண்பர்கள் சிலர் தூண்டியதன் விளைவாகப் பத்துக் கட்டுரைகள் கொண்ட இந்நூல் வெளிவருகின்றது. அது ஆம் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்" திருவடிவாரத்தினின்றும் உலாவினைத் தொடங்குகின்றது. தமிழார்வம் மீக்க கல்லூரி மாணாக்கர்கட்கு இது பெரிதும் ஒரு தூண்டுகோலாக அமைதலும் கூடும். ஒல்லும் வகையில் அவர்கள் இந்நூலினைப் பயன்படுத்திக் கொள்வார்களாக இந்நூலில் உள்ள கட்டுரைகள் பல்வேறு காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பெற்று வெளிவந்தவை. ஒன்றிலுள்ள கருத்துகள் பிறிதொன்றிலும் காணப் பெறலாம். அவை எடுத்த பொருளை விளக்குவான்வேண்டி அமைந்தவையேயன்றி கூறியது கூறல்" என்ற குற்றத்தின் பாற் படா எனக் கொள்வார்களாக. என் அரிய நண்பரும் புதிய துறைகளில் தமிழன்னை யின் கோலங்காண்டல் வேண்டும் என்ற ஆர்வத்தால் துடிக்கும் அறிஞருமான திரு. அர. சு. தாராயணசாமி நாயுடு அவர்கள் தம் அரிய அணிந்துரையால் இந் நூலினைப் போற்றியுள்ளார்கள். அன்னாருக்கு என் உளக் கனிந்த நன்றி. இந்நூலை வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங் கடவன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினருக்கு (Syndicate) -சிறப்பாக 'வாமனன் பூமி என்ற உணர்ச்சியுடன் அதனைத் திறம்படக் கண்காணித்து வரும் அதன் துணை வேந்தர் டாக்டர் W. C. வாமன் ராவ் அவர்கட்கு-என் உளங்கனித்த பணிவார்ந்த நன்றி என்றும் உரியது. இந்நூலை மனமுவந்து ஏற்று வெளியிட்ட தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும், சிறப்பாகப் புதிய துறைகளில்