பக்கம்:அறிவியல் விருந்து.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2? அறிவியல் விருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பிப் புவியைப் பல சுற்றுகள் சுற்றிய பிறகு மீண்டும் பூமிக்கு மீட்பதில் இரஷ் யாவும் அமெரிக்காவும் வெற்றியடைந்து விட்டன. இதற்கு அடுத்த திட்டம் மனிதன் அம்புவிக்குச் சென்று மீள்வ தாகும். விண்வெளிக் கலத்தின் மூலம் மனிதன் அம்புலியை அடைவதற்கு முன்னர்ப் பலபடிகளில் சோதனைகள் மேற் கொள்ளப பெற்றன. முதலில் ஆளில்லாத விண்கலன்களைக் கொண்டும், அதன் பிறகு ஆளுள்ள விண்கலன்களைக் கொண்டும் இச்சோதனைகள் மேற்கொள்ளப் பெற்றன. அப்போலோ 1 முதல் 10 வரை உள்ள விண்வெளிக் கலங் கனின் இச்சோதனைகள் மேற்கொள்ளப் பெற்றன. அப்போனோ-1 இன் பயணத்தில் மனிதன் அம்புவியை அடைந்து விட்டான். அப்போலோ-1 இன் பயணம்தான்.அப்போலோபயணங் களுள் மயிர்க்கூச்செறியக் கூடிய மாபெரும் பயணமாகும்.” இத்தப் பயணத்தில் நீல் ஏ. ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் அல் டிசின், மைக்கல் காவின்ஸ் என்ற மூன்று விண்வெளி வீரர்கள் பங்கு கொண்டனர். ஆர்ம்ஸ்டராங் என்பவரே குழுவின் தலைவர். சாட்டர்ன்-5 என்ற ம .ெ ரு ம் இராக்கெட்டே அப்போலோ-11 விண்கலத்தை இயக்கப் பயன்படுத்தப் பெற்றது. இந்த இராக்கெட்டு ஒன்றன்மீது ஒன்றாகப் பொறுத்தப்பெற்ற மூன்றடுக்கு இராக்கெட்டு ஆகும். இதன் முதல் அடுக்கில் மட்டிலும் 1600 டன் திரவ உயிரியமும் (Oxygen), 650 டன் மண்ணெண்ணெயும் பயன்பட்டன. இரண்டாவது அடுக்கில் மேற்குறிப் பிட்டவை தவிர, தனியே திரவ நீரியமும் (Hydrogen) திரவ உயிரியமும் கலந்த எரிபொருள் நிரப்பப்பெற்றது. .ே இது 1969ஆம் ஆண்டு சூலை 16ம் நாள் தோடங்கியது.