பக்கம்:அறிவியல் விருந்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 அறிவியல் விருத்து இராக்கெட்டு விநாடிக்கு 15 டன் எரிபொருளை ஏப்பமிட்ட வண்ணம் எரிமலை கக்குவது போன்ற சுவாலை யைப் பீறிட்டுக் கொண்டு மெதுவாக விண்ணை நோக்கிக் சென்றது; படிப்படியாகத் தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டு இரண்டரை மணித்துளிகளில் 144 கி. மீ, உயரத்தை அடைந்தது. இப்பொழுது முதல் அடுக்குப் பகுதி கழன்று கொண்டு இரண்டாவது அடுக்குப் பகுதி இகங்கத் தொடங்கியது. இது விண்கலனை மேலும் உயரத்தில் கொண்டு செலுத்தியது. இதிலுள்ள எரி பொருள் தீர்ந்ததும் இதுவும் இராக்கெட்டினின்று கழன்று கொண்டது. ஒன்றாவது அடுக்குப் பகுதி விண்கலனைத் தாங்கிய வண்ணம் புவியைச் சுற்றி வந்தது. சந்திரனை நோக்கிப் பாய்வதற்கு முன் அஃது இரண்டரை மணி நேரத்தில் 1 தடவை புவியை வலம் வருதல் வேண்டும். இப்பொழுது விண்வெளி வீரர்கள் எல்லாச் சாதனங்களை யும் சரி பார்த்துக் கொண்டனர். இங்ங்னம் சரி பார்த்த பிறகு இராக்கெட்டின் மூன்றாவது பகுதி இயங்கியது. இந்நிலை யின் விண்கலம் அம்புலியை அடைவதற்கு 421,280 கி. மீ. தொலைவைக் கடந்தாக வேண்டும். இப்பொழுது விண் கலன் விநாடிக்கு 1923 மீட்டர் வீதம் சென்று கொண் శ్రీఛ్ఛ్ விண்கலன் திங்கள் மண்டலத்தை நோக்கி விரையும் பொழுதுதான் மிகக் கடினமான செயலை நிறைவேற்றினர் விண்வெளி வீரர்கள். தாங்கள் இருந்த விண்கலனை இராக்கெட்டினின்றும் தனியாகப் பிரித்தனர். விண்கலன் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் நிலையிலேயே தலைமை விண்வெளிவீரர் ஆர்மஸ்ட்ராங் அதனை அரை வட்டமாகச் சுழன்று திரும்பச் செய்தார். இங்ங்ணம் திரும்பிய பிறகு விண்கலனின் கூரிய முனை இராக்கெட்டின்