பக்கம்:அறிவியல் விருந்து.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புவிப் பயணம் #25 மூன்றாவது பகுதியை-அதனுள் பாதுகாப்பாக இருக்கும் அம்புலிக் கழுகை-நோக்கியபடி இருந்தது. இந்நிலை யில் அவர் அப்படியே இராக்கெட்டினை அணுகி விண்கலனி லுள்ள கட்டளைப் பகுதியின் கூரிய முனையுடன் அம்புவி ஊர்தியைப் பொருத்திக் கொள்ளச் செய்தார். பிறகு அதனை இராக்கெட்டினின்றும் பாதுகாப்பாக விடுவித் தார். இப்பொழுது விண்கலனும் (கட்டளைப் பகுதியும்) அம்புவி ஊர்தியும் இணைந்த வண்ணம் சந்திரனை நோக்கி விசைந்தன. இப்பொழுது இராக்கெட்டின் மூன்றாவது பகுதியும் விண்வெளியில் கழற்றிவிடப் பெற்தது, இனி அதற்கு வேலை இல்லாததால்! இணைந்த வண்ணம் சந்திரனை நோக்கிச் சென்று கொண்டிருந்த விண்கலனும் அம்புலி ஊர்தியும் படிப்படி யாகச் சந்திரனின் ஈர்ப்பு ஆற்றல் சூழ்நிலையை நெருங்கின, பிறகு ஆற்றலின் காரணமாகச் சந்திரனைச் சுற்றி வந்தன. சந்திரனில் இறங்கப் போகும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் அல்டிரி னும் தாங்கள் இருந்த விண்கலத்தினின்றும் குகை போன்ற ஒர் அமைப்பு வழியாக அம்புவி ஊர்தியினுள் நுழைந்து அதனை விண்கலத்தினின்றும் பிரித்தனர். இப்பொழுது இரண்டும் தனித்தனியே சந்திரனைச் சுற்றி வந்து கொண் டிருந்தன. தாய்க் கலனில் இருந்து கொண்டே காலின்ஸ் சந்திரனைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கீழாக அம்புலி ஊர்தியிலிருந்து கொண்டு ஏனைய இருவரும் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்தனர். இவர் கள் இருவரும்தான் சந்திரனில் இறங்க வேண்டியவர்கன். சந்திரனுக்கு அண்மை உயரத்தில் சுற்றி வந்து கொண் டிருந்த 'கழுகு' என்ற அம்புலி ஊர்தியிலுள்ள சில விசை களை இயக்கி அதனை அம்புலித் தரையில் இறக்கினர் அதிலிருந்த விண்வெளி வீரர்கள். 'கழுகு" சந்திரனில் இறங்கியதும் இருவரும் கதவைத் திறந்து கொண்டு ஆ-8 -