ižá அறிவியல் விருந்து உடனே வெளியே வரவில்லை. ஊர்தியிலுள்ள முக்கோண வடிவமான இரு சாளரங்களின் வழியாகச் சந்திரனின் மேற்பரப்பைப் பார்த்ததுடன் அப்போதைக்கு மனநிறைவு பெற்றனர். ஏனெனில் அம்புவியில் இறங்கிப் பதினைந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் அதன் தரையில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது அவர்கட்கு இடப் பெற்றிருந்த கட்டளை இறங்கிய வேகத்தில் ஊர்திக்கு ஏதாவது ஊறுநேர்ந்துள்ளதா என்பதை முதலில் அவர்கள் சோதிததுப் பார்த்தனர். பிறகு இனிமையாக உண்டு, அமைதியாக எட்டு மணி நேரம் உறங்கி ஒய்வு கொண்டனர். பிறகு இருவரும் அம்புவியில் இறங்கி ஏழு மணி நேசத்தில் தம் பணியை முடித்துக் கொண்டனர்." அல்டிரிலும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் அம்புலியில் தன்னந் தனியாக இருந்தபோதிலும் புவியில் கோடிக்கணக்கான மக்கள் அவர்களுடனேயே இருக்கும் உணர்வைத் தொலைக் காட்சிமூலம் பெற்றனர். அவர்களுடைய தலைக் கவசத் திற்கு ை(Heiniet) நுண்ணிய ஒலிவாங்கிகள் (Microphones) இருந்தன. சிறிய ஒலிபரப்புச் சாதனங்களை அவர்கள் தங்கள் முதுகில் சுமந்து கொண்டிருந்தனர். அம்புலி ணர்தியிலும் ஒலிபரப்புக் கருவிகள் இருந்தன. இவற்றால் அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் புவியில் உடனுக் குடன் ஒலிபரப்பாயிந்து; மக்கள் அதனைக் கேட்டு மகிழ்ந் தனர். தொலைக்காட்சிக் காமிராவை அவர்கள் இயக்கத் தொடங்கிவதும் உடனுக்குடன் அக்காட்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொலைக்காட்சிச் சாதனங்கள் உள்ள இல்லங்கன்தோறும் தெரிந்தன; அவற்றை மக்கன் கண்டு மகிழ்ந்தனர். இதற்கு ஒளிபரப்புச் சாதனங்களுடன் 19. பணியின் விவரங்களை "அம்புலிப் பயணம்' ج۔ - - -< - يدعم "தொலை உலகச் செலவு’ என்ற இவ்வாசிரியரின் நூல் களில் காண்க (இரண்டும் கழக வெளியீடுகள்)
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/114
Appearance