பக்கம்:அறிவியல் விருந்து.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கதிரியக்க ஓரிடத்தான்கள் ஒரு சமயம் அமெரிக்க நாட்டில் வாஷிங்க்டன் என்ற நகரில் பத்திரிகையாளர்கள் மாநாடு ஒன்று நடை பெற்றது. மாநாட்டின் முக்கிய நோக்கம் பத்திரிகை யாளர்கள் அணுவாற்றவின் உடன்விளைவுப் பொருள் ஆளாகிய கதிரியக்க ஓரிடத்தான்களால் ஏற்பட்டிருக்கும் நல்விளைவுகளையெல்லாம் அறியச் செய்வது. மாதாட் டிற்கு வந்திருந்த அன்பர்களில் ஒருவர், ஒரிடத்தான் என்றால் என்ன?’ என்ற வினாவை எழுப்பினார். அதன் பிறகு அதனையொட்டி நீண்டதோர் ஆராய்ச்சி நடை பெற்றது. அணுவாற்றலை நன்கு அறிந்த வல்லுநர் ஒருவர் அவ்வின் விற்கு நீண்டதோர் விளக்கம் தந்தார். அதில் அவர் அணு-எடை, அணு-எண், தனிமங்களின் வேதி யியற் பண்புகள், ஆவர்த்த அட்டவணை, நியூட்ரான்கள், புரோட்டான்கள், அணுவின் உட்கரு அமைப்பு முதலிய பல்வேறு அரிய செய்திகளை எடுத்துரைத்தார். ஒரு கரும் பலகையைக் கொணர்ந்து பல்வேறு விளக்கப் படங்கள் அரைத்து காட்டப்பெற்றன. கருதிறமுள்ள வட்டங்கள், வெண்மைநிறமுள்ள வட்டங்கள் வரையப்பெற்று அணு வின் இயைபுப் பகுதிகள் விளக்கப்பெற்றன. இவ்வாறு நடைபெற்ற நீண்டதோர் ஆராய்ச்சியில் பத்திரிகை யாளர்களில் ஆழ்ந்த அறிவுடைய பலர் பல்வேறு வினாக் களை எழுப்பினர். அவற்றிற்கெல்லாம் விரிவான விளக்கம் தரப்பெற்றது. இறுதியாக வினாவிடுத்தல் நிறுத்தப் 1. உடன் விளைவுப் பொருள்-By-product. 2. & suffog oil-aro-Periodic table.