பக்கம்:அறிவியல் விருந்து.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

籍 ஒல்லும் வகை எல்லாம் தமிழ்ப்பணி புரியவேண்டும் என்ற தமிழ்உணர்ச்சிவிக்க அதன் அதிபர் திரு, கன. முத்தையா செட்டியார் அவர்கட்கும் என் அன்பு:கலந்த நன்றிகைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றேன். மூதறிஞர் உயர்திரு தி. மூ. நாராயணசாமி பிள்ளை அவர்கள் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தைத் தந்தவர்கள். இவர்கள் வழக்குரைஞராகத் தம் வாழ்க் கையைத் தொடங்கிப் பிறகு படிப்படியாகத் தம் வாழ்க் கையைப் பொதுப் பணிக்கென அர்ப்பணித்தவர்கள். அரசினர் வழக்குரைஞர், திருச்சி நகராட்சித் தலைவர், திருச்சி மாவட்டக் கழகத் தலைவர், சென்னை சட்ட (மேல்) சபை உறுப்பின், சென்னை அறநிலையக் கழகத் தலைவர், சென்னை சர்வீஸ் கமிஷன் தலைவர், பல்கலைக் கழக நிதிக் கமிஷன் உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் போன்ற பல்வேறு துறைகளில் உளத் துய்மையுடன் பணிபுரிந்து பெரும்புகழ் பெற்றவர்கள். இத்துறைகளில் பணியாற்றியபொழுது 'பண்புடையார் பட்டுண்டு உலகம், "உயர்திணை என்மனார் மக்கட் கட்டே” என்ற ஆன்றோர் வாக்குகட்கு எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள். அவர்லாட்டும் புன்முறுவலுடன் இனிமை யாகப் பேசுபவர்கள்; காண்டிற்கெனியவர்கள்; கடுஞ் சொல் அறியாதவர்கள். எடுத்த காரியத்தை இனிதே முடிக்கும் திறம் படைத்தவர்கள். நல்ல சமயப் பற் துடையவர்கள்; என்றும் இறையை உளத்தில் உறுதி யாகக் கொண்டிருப்பவர்கள். நாட்டு நலன்களிலும் இளைஞர் கல்வியிலும் பேருக்கம் காட்டுபவர்கள். திற் சமயம் திருவானைக்கா திருக்கோயில் திருப்பணிக் குழு வின் தலைவராக இருந்து பணியாற்றி ருேவர்ைகள். பழுத்த சமயப் பற்றும் இறையின் பால் உறுதியும் உடைய இவரை இறைவனே இக் 'கைங்கரியத்தில்"