பக்கம்:அறிவியல் விருந்து.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஓரிடத்தான் கன் i:35 அவ்வாறு சிதையுங்கால் துகள்களையும் ஆற்றலையும் வெளியிட்டவண்ணமுள்ளன. பெ ரு ம் பா இலு ம் ஆற்றல் வெப்பமாகவே வெளிப்படுகின்றது. இவ்வெப்பம் கண் ணுக்குத் தெரியாத, ஆல்ஃபா-கதிர்கள், பீட்டா-கதிர்கள், காமா-கதிர்கள் என்ற மூவகைக் கதிர்களாக வெளிப்படு கின்றது. இக்கதிர்கள் மிகவும் அபாயகரமானவை; மானிட உடலுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியவை. இரண்டு. இவை சிதைந்து அழியுங்கால் மாறாததொரு வேகத்தில் சிதைந்தழிந்து இறுதியில் கதிரியக்கத் தன்மை யையே இழந்துவிடுகின்றன. இச்செயல் முழுவதும் தானாகவே நடைபெறுகின்றது. எந்த விதமான பொறி நுட்பத்தைக் கொண்டும் இச்செயலின் வேகத்தை மிகுதிப் படுத்தவும் (ißig-lis; ; ; குறைவாக்கலும் இயலாது. ஒவ்வொரு கதிரியக்கத் தனிமத்திலும் விநாடிதோலும் அப்பொருளின் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதி சிதைந்தழித்த வண்ணமுள்ளது. இப்பகுதி மிகப் பேரளவில் இருப்பின் இச்செயல் மிகத் தீவிரமாக நடைபெறும்! எல்லா அணுக் களும் உடைந்து ஒரு விநாடிக்குள் வேறு பொருளாக மாறி விடக்கூடும்; வேறு சிலவற்றில் சில மணித்துளிகளில் அல்லது சில:ணிகளில் இச்செயல் முற்றுப் பெறும், சிதைந் தழியும் பகுதி சிறிதாக இருப்பீன் கதிரியக்கச் செயலும் வலிவற்றதாக இருக்கும்; கதிரியக்கத் தனிமமும் ஆண்டுக் கணக்கில் சிதைந்தழிந்துகொண்டே இருக்கும். அங்ங்னம் சிதைந்தழிவும் வேகம் எந்த ஒரு தனிமத்திற்கும் ஒரே அள வாகத்தானிருக்கும். எனவே, அணுக்களின் நிலையிலாத் தன்கையின் வேகத்தை-அஃதாவது கதிரியக்கச் செயலின் உறைப்பை-ஒரு குறிப்பிட்ட அளவுள்ள தனிமம் அது பாதியாவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்தை அளவாகக் கொண்டு அளக்கலாம். இக்கால அளவினை அறிவியலறி ஞர்கள் அத் தனிமத்தின் அரை-வாழ்வு’ என்று வழங்குவர். அரை-வாழ்வு என்பது ஒரு குறிப்பிட்ட அளவு கதிரியக்கத்