பக்கம்:அறிவியல் விருந்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஒரீடத்தான்கள் 137 தான் உயிரியத்தையும்' வேதியியற் பொருள்களையும் கொண்டுசெல்லும் சாதனம். அச்சத்தும் துத்தநாகச் சத்தும் குருதியிலுள்ள வெள்ளை பணு உடலிகள், சிவப்பு அணு உடலிகன், ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தில்’ பங்குபெறுகின்றன. இந்த உலோகங்களின் செயலைக் கண்டறிந்து குருதிச் சோகை, லூக்கேமியா (வெள்ளணுக் கிருமி நோய்) என்ற நோய்களைப்பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள் ைமுடிகின்றது. கதிரியக்க அ யம் செலுத்தப் பெற்ற உடலிலிருந்து குதுதியை எடுத்து ஆய்ந்த அறிஞர்கள் அயச்சத்தின் ஒரு சிறு பகுதியையே உடல் நாடோறும் இழந்துவருகின்றது என்றும், குருதியிலுள்ள சிவப்பு அணுஉடலிகளின் சிதைவினால் 90 அல்லது 95 விழுக்காடு அயச்சத்து கழிவுப்பொருள்களாக உடலி லேயே தங்கி மீண்டும் அவை புதிய சிவப்பு அணுஉடலிக ளாகப் பயன்படுகின்றன என்றும் அறிந்தனர். எனவே, அடிக்கடிக் குருதியை வழங்கும் குருதிக் கொடையாளிகள் உடலில் அயச்சத்து குறையாமற் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இன்னும் எலும்பு மச்சையிலுள்ள" சிவப்பு அணுஉடலிகள் சில நாட்கள் வரையிலும் அயச்சத்தினை ஏற்றுக் கொள்கின்றன என்றும், நன்றாகப் பக்குவப்பட்ட சிவப்பு அணுஉடவிகள் அதனை ஏற்பதில்லை என்றும் சோதனைகளால் கண்டறிந்துள்ளனர். இவ்வாறே கதி ரியக்கத் துத்தநாகத்தை உடலில் செலுத்தி லூக்கேமியா என்ற நோயின் தன்மையை அறிந்தனர். லூக்கேமியா நோயால் பீடிக்கப்பெற்ற வெண்ளை அணு உடலிகளில் துத்தநாகச் சத்து குறைவாகவே உள்ளது.

10. *-ijifilulê-Oxygen. 11. வளர்சிதை மாற்றம்:Metabolisms. }2. g7$#úęij u^& &*-Bqqe f&&rzow.