உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 அறிவியல் விருந்து அறுவைசிகிச்சை முறையிலும் கதிரியக்கஓரிடத்தான்கள் பயன்படுகின்றன. அழுகு புண் என்பது அறுவை மருத்துவர் அடிக்கடி காணும் ஒரு நோய்; இந்த நோய் குருதியோட்டிக் குறைவால் ஏற்படலாம்; இஃது ஏற்படுவதற்குப் பிற காரணங்களும் உள. இந்தப் புண் ஏற்பட்டால் அழுகிப் போன பகுதியை உடலினின்றும் வெட்டி எறிவது இன்றிய மையாதது. ஆனால், சிறந்த அறுவை வல்லுநர் கூட எத்த இடத்தில் வெட்டுவது என்பதை மிகத் துல்லியமாக அறுதியிடுவது சிரமம். இதனை ஆறுதியிடுவதில் கதிரியக்க ஓரிடத்தான்கள் பெரிதும் துணை புரிகின்றன. சாதாரண சோற்றுப்பினைச் சுழலினி' என்னும் பொறியிலிட்டுக் கதிரியக்கமுடையதாகச் செய்து இதற்குப் பயன்படுத்து கி ன் ற ன ர். உப்பு பெற்ற கிளர்ச்சி சில மணி நேரம்தான் நீடித்திருக்கும். இந்த உப்பில் ஒரு சிது பகுதியைச் சாதாரண உப்புடன் கலந்து உணவுடன் சேர்த்து உ எண் டா ல் சோற்றுப்புடன் கதிரியக்க உப்பும் சென்று குருதியில் கலந்துவிடும். உடலில் குருதி ஓடிவரும் இடம் எங்கும் இந்த உப்பும் கூடவே செல்லும். அங்கெல்லாம் இதன் அணுக்கள் வெடித்து காமா கதிர்களை வீசும். அழுகிய பகுதியின் அருகே கைகர் எண்-கருவியைக்கொண்டு சோதித்தால் எந்த இடத்துடன் குருதியோட்டம் தடைப்பட்டு நின்று விடுகின்றது என்பதைத் துல்லியமாக அறுதியிட்டுவிடலாம். இ.ழவுத்தொழிலில்: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற ஆன்றோர் வாக்கினை நன்குணர்ந்த அறிவியலறிஞர்கள் உழவுத்தொழிலிலும் தம் கவனத்தைச் செலுத்திவருகின்றனர். அமெரிக்க அணுவாற்றல் குழு ஆண்டுதோறும் இத்துறை ஆராய்ச்சிக்குக் கோடிக் கணக் 12. *g, *o-Cyclotroń.