பக்கம்:அறிவியல் விருந்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靠 ** 盖总勤 - 浔 கதிரியக்க ஒரிடத்தான்க @况 கான டாலர் செலவிட்டுவருகின்றது. கதிரியக்க ஒரிடத் தான்கள் சிறந்த உரங்களை ஆக்குவதிலும் சிறந்த பயிர் வகைகளைக் கண்டறிவதிலும், பயிர்களைச் சிறந்த முறையில் வளர்த்து அதிகமாகப் பலன் தரவும், பயிர்கனைப் பீடித்துவரும் பூச்சிகளையும் பயிர்நோய்களையும் ஒழிக்கக் கூடிய வழிவகைகளைக் காணவும் மேற்கொள்ளப்பெறும் ஆராய்ச்சிகளிலும் பயன்பட்டுவருகின்றன. இவை உழவுத் தொழிலைச் சிறந்த முறையில் நிறைந்த பயனை விளைவிக்கக்கூடிய அற்புதத் தொழிலாக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அண்மைக் காலம்வரையிலும் தாவரங் களின் வளர்ச்சி, அவற்றின் பருமன், அவை தரும் பவன் ஆகியவற்றைக்கொண்டே உரமிடுதலின் விளைவுகளை அறுதியிட்டுவந்தனர். கதிரியக்க ஒரிடத்தான்களைக் கண்டறிந்த பிறகு இந்நிலை மாறிவிட்டது. இவற்றைக் கொண்டு பொருள் பொதிந்த புள்ளிவிவரங்கள் முதன் முதலாகக் கண்டறியப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக முதிர்ந்த தாவரங்களிலுள்ள ஸ் எ ர ச் சத்து மண்ணில் இயற்கையில் படிந்து கிடக்கும் பாஸ்ஃபேட் உப்பினின்றும் வந்ததா, அன்றி உழவர்கள் இடும் செயற்கை உரத்தினின்றும் வந்ததா என்பது அறுதியிடப் பெற்றது. ஊட்டப் பொருள்கள் தாவரங்களுக்கு மண்ணின் மூலமும் அங்கிருந்து வேர்களுக்கும் அவற்றி லிருந்து தாவரங்களுக்கும் எந்த அளவில் செல்லுகின்றன? எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றன? என்பதை அறியப் பயன்படுகின்றன. இன்னும் இவ்வோரிடத்தான்கள் அறிவிய லறிஞர்களுக்குத் தாவரங்களின் வளர்ச்சிப் பருவங்களில் எப்பருவத்தில் உரம் அதிகமாகத் தேவைப்படுகின்றது? என்பதைத் தீர்மானிக்கவும், தாவரங்களுக்கு முழுநன்மை பயக்கவேண்டுமாயின் உரத்தை எங்கு எவ்வாது இட வேண்டும்? என்றும், நாட்டின் பல்வேறுபட்ட மண்ணிற் கேற்றவாறு எந்தவகை உரங்கள் நன்மை பயக்கின்றன? يوس وايي