உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 அறிவியல் விருந்தி என்பதை நிலைநிறுத்தவும், இன்னும் உர மிடுதவில் இன்னோரன்ன நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்மானிக் கவும் துணை செய்கின்றன. கதிரியக்கக் கிளர்ச்சியைப் பயன்படுத்தி வியத்தகு ஆராய்ச்சிகள் செய்யப்பெற்றுவருகின்றன. சிலவகைக் கதிர்கனால் உயிரினங்களில் சிலவகை மாறுதல்கள் ஏற்படு கின்றன என்றும், இவை குடிவழியாக இறங்கக் கூடியவை என்றும் அறிவியலறிஞர்கள் நீண்டநாட்களாகவே அறிந் திருந்தனர். இம்மாறுபாடுகளைச் சடுதி மாற்றங்கள்’’ என்று குறிப்பிடுவர். அமெரிக்காவில் ஒட்ஸ் என்ற ஒருவகைத் தானியத்தில் நியூட்டிரான்களைச் செலுத்திப் பயிர்செய்து துருநோய் என்ற ஒருவகை நோயினால் பாதிக்கப்பெறாத புதுவகை ஒட்ஸைப் படைத்துள்ளனர். இவ்வகைத் தானியத்தை உண்டாக்க ஒன்றரை யாண்டுகள் ஆயின. பழைய பயிரிடுமுறைகளைக் கையாண்டிருப்பின் இத்தகைய விதைகளை உண்டாக்கக் குறைந்தது பத்து பாண்டுக் காலமும் அதிகச் செலவும் ஆகியிருக்கும். கடந்த ஒருசில ஆண்டுகளாகத் தாவரங்களுக்கு ஏற். படும் நோய்கள் பற்றியும், பைங்கூழ் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் களைகளை அழித்தல்பற்றியும், தாவரங்களுக்குப் பூச்சிகளால் நேரிடும் அழிவுபற்றியும் ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆராய்ச்சி பில் கதிரியக்க ஓரிடத்தான்கள் பெரிதும் பங்குபெறு கின்றன. ஈக்கள், கொசுக்கள், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளையும் கதிரியக்கமுடையவைகளாகச் செய்கின் றனர் அறிவியலறிஞர்கள்: கதிரியக்க ஓரிடத்தான்களைக் கொண்ட பொருள்களை உண்பித்து அவ்வாறு அடை யாளமிடுகின்றனர். இதனால் அவற்றின் பழக்கங்கள் i3. *GÉ torripiissir-Mutations.