உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஓரிடத்தான்கள் #43 மாறிவிடுகின்றன; பழகும் எல்லையும் முறையும் மாறிச் சிறந்த கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. எடுத்துக்காட் டாக, ஒருவகையான பெரிய ஈக்களில் 15,000 ஈக்களுக் குக் கதிரியக்கமுள்ள பாஸ்வரம் கலந்த பானம் கொடுக்கப் பெற்றது. இதனால் அந்த ஈக்களின் உடலிலுள்ள கதிரியக்க முள்ள அணுக்களைக்கொண்டு அவற்றை மறுபடியும் அடையாளம் கண்டுகொள் ைமுடியும், அவற்றை ஓரிடத்தில் திறந்துவிட்டு அங்கிருந்து வெவ்வேறு துரங் களில் பொறிகளை அமைத்து அவற்றில் சிக்கிய சக்கனைச் சோதித்தனர். இந்த ஈக்கள் ஒருநாளில் நான்கு மைல் செல்லக்கூடும் என்பது தெரிந்தது. பண்ணையில் ஈக்களை விடுவித்த இடத்திலிருந்து சில ஈக்கள் மொத்தம் 28 மைல் தூரம் சென்றிருந்தன. இவ்வாறு பூச்சிகளின் வாழ்க்கை இயல்புகளைப் பற்றி அதிகம் தெரிந்து அவைகளை எதிர்க்கத் தக்க சிறந்த வழிகளை அறிவியலறிஞர்கள் கண்டுவிடுகின்றனர். கால்நடைப் பண்ணைகளில் தோன்றும் சில பீடைகளை ஒழிப்பதற்கும் கதிரியக்க ஓரிடத்தான்கள் பயன்படுகின்றன. தொழில் துறையில்: கதிரியக்க ஒரிடத்தான்கள் தொழில் துறையிலும் பெரிதும் பயன்படுகின்றன. இத் துறையில் இவை பயன்படுவதை மூன்று வகையில் அடக்கிக் கூறலாம். அவை: அளவிடுதல், அடையாளம் இடுதல், தேய்மானத்தைக் காணல் என்பவை. இவை ஒவ்வொன்றை யும் ஒவ்வோர் எடுத்துக்காட்டினால் விளக்குவோம். கதிரியக்கப் பொருள்களினின்றும் வெளியாகும் கதிர்க் கற்றையின் உறைப்பில் நேரிடும் மாற்றத்தைக் கணக்கிட்டே அளவிடுதல் பற்றியசெயல்கள்மேற்கொள்ளப்பெறுகின்றன. கதிரியக்கம் பெறுகின்ற பொருள்கள், விளைவிக்கும் மூலங்களாகப்பயன்படுத்தப்பெறுகின்றனவேயன்றிபொருள்