பக்கம்:அறிவியல் விருந்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அறிவியல் விருந்து உற்பத்திச் செவிலோ, அன்றி உற்பத்திப் பொருள் கவிலோ அவை சேர்க்கப்பெறுவதில்லை. கதிரியக்கமுள்ள கனத்தை அளக்கும் கருவி நடைமுறைச் செயல்களைக் கண்டறியம் கருவிகளில் தலை சிறந்தது. அமெரிக்காவில் இன்று 293 க்கு மேற்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பெறும் தகடு வடிவத்திலுள்ள பல்வேறு பொருள் களின் சனத்தைக் கண்டறிவதற்கு இக்கருவி பயன்படுத்தப் பெறுகின்றது. இவ்வாறு அளவிடப்பெறும் பொருள்களில் கரித்தாள் (Carbon paper), கெழுகுத்தாள், பொருள்களை மூடுவதற்குப் பயன்படுத்தும் தாள்போன்ற காகிதங்களும்; அலுமினியத் தகடு, தாமிரத் தகடு, எஃகுத் தகடு, தகரத் தகடு போன்ற தகடு வகைகளும்; பல்வேறுவகைப் பிளாஷ்டிக் பொருள்கன், இரப்பர்ப் பொருள்கள், கூரை வேய்வதற்கும் தரையில் விரிப்பதற்கும் பயன்படும் போருள்கள், கயிறு இழைகள், ஒளிப்படப் ஃபிலிம்கள், பூச்சுப் பூசிய வேறு தகடு வகைகளும் அடங்கும். சில உற்பத்தித் தொழிற்சாலைகளில் பொருள்களைப் பாட்டலங்களிலும் தகரக் கலன்களிலும் அடைக்கும் 'சயலில், மேற்படிப் பொட்டலங்களையும் கலன்களையும் சோதிப்பதற்குக் கதிரியக்க ஒரிடத்தான்கள் பயன்படு கின்றன. இவை பொறிநுட்ப விசையால் நிரப்பப் பெற்று ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றுகோண்டேயிருக்கும். ஒரு பொட்டலத்தில் சரியான அளவு பொருள் நிரம்பாதிருந் தால் அதன் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திலுள்ள எண்கருவிக்கு அதிகக் கதிர்கள் செல்லும். உடனே ஒர் எச்சரிக்கை ஒளி ஒளிரும்: அல்லது சில இயந்திரப் பகுதிகள் இயங்கிக் குறைபாடுள்ள பொட்டலத்தைக் கீழே தள்ளிவிடும். so to: அடையாளமிடுவதற்கும் கதிரியக்க ஓரிடத்தான்களைப் :ன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் அவற்றைச் சில