பக்கம்:அறிவியல் விருந்து.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஒகீடத்தான்கள் 4 பொருள்களில் அல்லது செயல்களில் பயன்படுத்துகின்றனர். சில பெட்ரோலியத் தொழிற்சாலைகளில் நூற்றுக் கணக் கான மைல் நீளமுள்ள குழல்கள் பல்வேறு எண்ணெய்ப் பொருள்களைக் கடத்துவதற்குப் பயன்படுகின்றன. அக் குழல்களின் வழியாகப் பல பொருள்கள் தொடர்ந்து செலுத்தப்பெறுகின்றன. அங்கனம் அவை செல்லுங்கால் ஒன்றுடன் பிறிதொன்று கலக்கா திருக்கும் பொருட்டு ஒன்று எவ்விடத்தில் முடிந்து பிறிதொன்று எங்குத் தொடங்கு கின்றது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழல்வதியில் மிகச் சிறிய அளவு எண்ணெயில் கரையும் கதிரியக், ஒகிடத்தானை இரண்டு எண்ணெய்களும் சேரும் இடத்தில் போட்டுவிடுவர். அந்த எண்ணெய்களை எடுக்குன், இடங்களில் கைகர் எண் கருவியினைக் கொண்டு கதிரியக்கத் திரவத்தைக் கண்டறிந்துவிடலாம்; இச்செயல் மிக விரைவாகவும் நடைபெறுகின்றது. திரவங்களைக் கட்டுப்படுத்தும் வால்வுகளை இயக்குபவர் பல்வேறு குழல்களினின்றும் வரும் திரவங்களைச் சிறிது சிறிது எடுத்து அவை என்ன திரவம் என்று காணும் முறைகள் மிக மெதுவாக நடைபெறுபவை: அதிக எண்ணெயும் இதனால் வீணாகின்றது. இம்முறை கண்டறியப்பெற்ற பிறகு ஒரே குழல் வழியாகப் பண்படாப் பெட்ரோவியம், வழுக்கிடு எண்ணெய்கள், டீசல் எண்ணெய் போன்ற எல்லாப் பொருள்களையுமே ஒன்றன்பின் ஒன்றாக அனுப்ப ஏதுவாகின்றது. கைகர் எண்-கருவியினைக் குழலின்கேல் வைத்தே உள்ளே செல்லும் திரவத்தை அறிந்துகொன்ன லாம். வால்வுகளை இயக்குபவர் எண்ணெயை அவற்றிற் கேற்ற எண்ணெய்த் தேக்கங்களில் திருப்பி விட்டுண்டுவர். இன்னும், மிகச் சிக்கலான அமைப்பிலுள்ள குழல்களில்