8. தொல்பொருட் கலையில் புதிய ஆராய்ச்சி முறை தொல்பொருட் கலையை வரலாற்றின் துணைவி என்று கூறுவர் அறிஞர். புவியியலும் கால வரையறையும்: அவ்வரலாற்றின் இருகண்கள் என்றும் சாற்றுவர். கால வரையறையைப் பொறுத்தவரையிலும் அது வரலாற்று மாளிகையின் அடிப்படைக் கல்லாக அமைந்துள்ளது; கால வரையறையின்றேல் வரலாற்றறிஞன் நீரை விட்டு வெளியேறின மீனைப் போன்றவனாகின்றான். நிகழ்ச்சி களின் கால வரையறை சரியாக அமைந்தால்தான், வரலாற்றின் அடிப்படை பலமாக அமைத்து, அதன் மீது அமைக்கப்பெறும் கட்டடமும் உறுதியாக நிலைபெறும். வரலாற்றறிஞன் குறைந்த அளவு நிகழ்ச்சிகளின் நிரல் முறையையாவது அறிந்திருத்தல் வேண்டும். எடுத்துக் காட்டாக, புத்தரை அசோகருக்குப் பின்னர் வாழ்ந்த வராகக் கொண்டால், வரலாறு என்னாகும் என்று எண்ணிப் பார்மின்! அது கிடக்க. தொல்பொருட்கலையின் உயிர்ந்ாடியான பகுதி கால வரையறையை அறுதியிடுவதாகும். இதில் பல முறைகள் மேற்கோள்ளப்பெறுகின்றன. பழைய பொருள் ஏதாவ தொன்று புவியின் கண் புதிதாக அகழ்ந்தெடுக்கப் பேறின், அதன் காலத்தை-அதாவது வயதினை 1. தொல்பொருட் கலை-Archaeology. 2. Louisió-Geography. .ே காலவரைகதை-tiopology,
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/136
Appearance