பக்கம்:அறிவியல் விருந்து.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 ஆதிவியல் விருத்து பெற்று அண்மையில் (நவம்பர் 3, 1950) இவருக்கு, நோபல் பரிசும்" வழங்கப்பெற்றது. இதற்கு முந்திய ஆண்டில் ஐன்ஸ்டைன் பரிசினையும் வேறு பல சிறப்புகளையும் பெற்றுப் பெரும் புகழ் அடைந்தவர் இவர். அணுயுகம் தோன்றியபிறகு கால வரையறை செய் வதில் ஒரு புதிய முறை உருவாகியது. அது கதிரியக்கக் கரிமுறை' என்று வழங்கப்பெறுகின்றது. அணு.எடை 14-ஐக் கொண்ட கதிரியக்கக் கரியின் (C-14) அளவி னைக்கொண்டு கால வரையறை அறுதியிடப்பெறுவதாத லின் இம்முறை இப்பெயர் பெற்றது. கதிரியக்கக் கரி என்றால் என்ன? கதிரியக்கக் கரி என்பது கரியில் ஒரு வகை. இயற்கையில் 92 தனிமங்கள்' உள்ளன; அவற்றுள் பெரும்பாலானவற்றுள் இரண்டு வகையான அணுக்கள் உள்ளன. ஒன்று, சாதாரண அணுக்கள்; மற்றொன்று, ஓரிடத்தான்கள்”. ஒரிடத்தான் என்பது அணுவில் ஒருவகை; ஒரு தனிமத்தில் அடங்கியிருக்கும் அதன் அணுவின் ஒரு தனி வகையிலிருந்து எடையில் வேற்றுமைப்படும் மற்றொரு வகை. எடையில்வேறுபடினும் ஒருதனிமத்தின் எல்லா வகை ஓரிடத்தான்களும் வேதியியற் செயல்களில் முற்றிலும் ஒற்று மையுடையவை. ஓரிடத் தான்களிலும் இரண்டுவகை உண்டு. முதல்வகை நிலையிலா*’ ஒரிடத் தான்; இது சிதைந்து' பிரிந்தழியும்' தன்மைத்து. மற்றொருவகை நிலையான" ஓரிடத்தான்; இது ஒருநாளும் மாறுவதில்லை. C-4 என்பது 9. 35musi, uiño-Nobel Prize. 10. §§ffusés à siftopop-Radiocarbon method. 11. 3 offlott-Element. 12. ஒரிடத்தான்-isotope. 13. Éonou?sors-Unstable. 14. staros išsi-Decay. 15. 18ifišogo.go-Disintegration, it, flesouro-Stable.