பக்கம்:அறிவியல் விருந்து.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#55 அறிவியல் விருந்து கள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்; அது மரித்த காலத்திலிருந்து 5,600 பாண்டுகள் வரை மணித்துளி யொன்றுக்கு 7.55 பிரிந்தழிதல்கள் வீதம் (5.3-ல் பாதி) நடைபெறும்; மரித்த காலத்திவிருந்து 11,200 யாண்டுகள் வரையிலும் மணித்துளியொன்றுக்கு 3.83 பிரிந்தழிதல்கள் வீதம் (7.63-ல் பாதி) நடைபெறும்; இங்ஙனம் தொடர்ந்து தடைபெற்றுக்கொண்டேயிருக்கும். 20,000 அல்லது 30,000 யாண்டுகள் கழிந்த பின்னர் நடைபெறும் பிரித் தழிதல்கள் மிகக் கு ை வா. க இ ரு ப் த ல் அவற்றை அளத்தல் மிகக் கடினமாகும். நம்மிடமுள்ள ஒரு மாதிரிக் கரி பிரிந்தழியும் வேகத்தைக் கவனித்து அந்த மாதிரிக் கரியின் வயதினை அறிந்துகொள்ளலாம். அஃதாவது, அந்தக்குறிப்பிட்ட மாதிரியின்மூலம் இறந்ததி லிருந்து எவ்வளவு காலம் கழிந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இதுதான் கதிரியக்கக் கரியினைக்கொண்டு காலத்தை அறுதியிடுவதன் தத்துவமாகும். கதிரியக்கக் கரியனுக்கள் பிரிந்தழியும் வேகத்தை களப்பதற்கு ஒரு பிரத்தியேகமான கைகர் எண்-கருவி பயன்படுத்தப்பெறுகின்றது. இந்தக் கருவி ஒர் உருளை போல் அமைக்கப்பெற்று அதன் நடுவிவிருத்து ஒரு கம்பி நீண்டுசெல்லும்; அந்தக் கருவி ஒரு வாயுவால் நிரப்பப் பெற்றுள்ளது. கம்பிக்கும் உருளையின் சுவர்களுக்கும் இடையில் ஒரு மின்-அழுத்தம் இருக்குமாறு செய்யப்பெறு கின்றது. இந்தச் சுவர்களும் பொருத்தமான அளவிற்கு கின் ஏற்றும் செய்யப்பெற்றுள்ளன. காலம் கண்டறிய வேண்டிய மாதிரிக் கதிரியக்கக் கரி கைகர் எண்-கருவியின் உட்புறத்தில் வைக்கப்பெறுகின்றது. ஒர் அணு பிரிந்தழியுங்கால் அஃது ஒரு பீட்டாத் துகளினை வெளிவிடுகின்றது. இந்தத் துகள் எண்-கருவி

            • castsress**

39. 151-L-73, gas-Beta particle.