உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 அறிவியல் விருத்து புறையை' வைத்து முதலாவது தடையாகவுள்ள கதி ரியக்கங்களைத் திறமையாக உறிஞ்சி அவற்றை நீக்கலாம். –ಿ $ಳ : ಜೆ, ನ್ತಿಟ್ಟೆಳಿ - 5 தடையாகவுள்ள புறக்கதிரியக்கத் தின் முக்கிய மூலமான அண்டக் கதிர்கள் மிகவும் ஊடுரு விப் பாயும் தன்மையுள்ளன. ஆதலின், அவற்றை இந்த இரும்புக் காப்புறையால் தடுத்தல் இயலாது. ஆகவே, கைகர் எண்-கருவியை இக் கதிரியக்கத்திலிருந்து காப் புறையைக்கொண்டு தடுக்க முயல்வதைவிட வேறொரு யுக்திமுறையை மேற்கொண்டு அக் கதிர்களைப் பதிவு களிலிருந்து துடைத்துவிடுதல்’ சிறந்தது. அஃது இவ்வாறு செய்யப்பெறுகின்றது. கதிரியக்கக் கரியினைக் கொண்ட கைகர் எண்-கருவியினைச் சுற்றி அதனுடன் நெருங்கியிருக்குமாறு பல கைகர் எண்-கருவிகள் அமைக்கப் பெறுகின்றன; இவையனைத்தையும் சுற்றி இரும்புக் காப்புறை அமைக்கப்பெறுகின்றது. வெளிப் புறமாகவுள்ள கைகர் எண்-கருவிகள் எலக்ட்ரானிக் முறையில் இணைக்கப் பெற்று அவற்றின் ஏதாவதொன்றின் மூலம் அண்டக் கதிர்வீசல் கடந்துசெல்லும்பொழுது நடுவிலுள்ள கைகள் எண்-கருவி ஒரு விநாடியில் ஒரு சிறிது காலம் சுழற்றப் பெறுகின்றது. இரும்புக் காப்புறையையும் ஏக மைய வட்ட முறையில் கைகர் எண்-கருவியினையும் அமைத்துப் புறக் கதிரியக்கத்தினால் மணித்துளியொன்றுக்கு உண்டாகும் 600 எண்ணிக்கைகள் மணித்துளியொன்றுக்கு 5 அல்லது 6-க்குக் குறைக்கப்பெறுகின்றன. இதனால் நம்மிடமுள்ள மாதிரிப் பொருளுக்குக் கிட்டத்தட்ட சரியான பாகுபாட்டினை (Analysis) அடைய முடிகின்றது. கொடுக்கப்பெற்ற மாதிரிப் பொருளினைக் கொண்டு கிட்டத்தட்ட 48 மணிநேரம் அளந்து நாம் அதன் காலத்தை அறுதியிடுவது சாத்தியமாகின்றது; இந்த 44, asrt &qgon p=Süíeid.