பக்கம்:அறிவியல் விருந்து.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 5D அறிவியல் விருத்து வும் இருக்கலாம், அல்லது நன்கு பாதுகாக்கப்பெற்ற சிப்பியாகவும்" இருக்கலாம். ஆனால், அந்த மாதிரிப் பொருள் குறைந்தது அரை அவுன்சு" கரியையுடைய தாக இருக்கவேண்டும்; பொருளின் பருமன் (size) அதிலுள்ள கரியின் இருப்பைப் பொறுத்தது என்பதை நாம் அறிவோம்; இம் முறையில் காலக் கணக்கீடு செய்யப் பயன்படுத்தும் பொருள் நடைமுறையில் கிட்டத்தட்ட ஒர் அவுன்சு எடையுள்ளதாக இருக் கின்றது. இம் முறையைக் கையாண்டு அறிவியலறிஞர்கள் பல பொருள்களின் கால வரையறைகளை அறுதியிட் இன் எனர். ஈண்டு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருவோம். ஒர் எகிப்திய உத்தரகிரியைப் படகின் மீது இம் முறை பிரயோகிக்கப்பெற்று அதன் காலம் அறுதியிடப் பெற்றது. பண்டைக்காலத்தில் எகிப்தியர்கள் படகுகளைச் சின்னஞ்சிறு வடிவங்களில் அமைத்து இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகளில் அவற்றை வைப்பது வழக்கம். மூன்றாவது சீளாஸ்டரிஸ் மன்னனை அடக்கம் செய்த கல்லறையில் காணப்பட்ட அத்தகைய சிறு படகு ஒன்று சோதனைக்காக எடுத்து ஆராயப்பெற்றது. ஏனென்றால், அங்கு அடக்கம் செய்யப்பெற்ற அந்த அரசன் கி, மு. 1849-ல் இறந்தவன் என்பது தொல்பொருட் கலைஞர்கட்கு உறுதியாகத் தெரியும். கரி-14 பிரிந்தழிவுத் Tag: #E3-sheli. 49. அவுன்சு - பெnce (ஒரு பவுண்டு எடையில் பதி ாைறில் ஒரு பங்கு), 5.9 எகிப்திய உத்தர கிரியைப் படகு Egyptian funeral boat. 5. மூன்றாவது, சிலாஸ்டரிஸ் மன்னன் . King Sesostris {i£,