பக்கம்:அறிவியல் விருந்து.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்பொருட் கலையில். Aşţ சோதனையை அதன் மீத பிரயோகித்து அறுதியிடப் பெற்ற காலம் (352 +130) வரலாந்து உண்மையோடு முற்றிலும் இணங்கியிருந்தது. எனவே, இம் முறை திருத்த மானது என்பது உறுதிப்பட்டது. நியூயார்க் மாநிலத்தின் மேற்பகுதியில் சில இடங்களில் சிவப்பு இந்தியரின்" பண்டைச் சின்னங்கள் சில காலமாக அகப்பட்டு வந்துள்ளன. இவை எந்த இனத்தைச் சேர்ந்த வர்களின் சின்னங்கள் என்பதைத் தொல் பொரு. கலைஞர்கள் நன்கு அறிவர். சுமார் 1900 ஆண்டுகட்கு முன், அஃதாவது, கிறிஸ்து பிறந்து சில ஆண்டுகட்குப் பின், அந்தப் பகுதியில் அந்த இனம் குடியேறி இருக்கவேண்டுக் என்று அந்தக் கலைஞர்கள் மதிப்பிட்டிருந்தனர். 1850 இல் அந்த இனத்தின் இன்னும் மிகப் பல சின்னங்கள் அதே பகுதியில் தோண்டி எடுக்கப்பெற்றன. இதுதியாகக் கிடைத்த சிலவற்றைக் கரி.14 சோதனைக்கு உட்படுத்தினர். அவற்றின் திருத்தமான காலம் துல்லியமாக அறுதியிடப் பெற்றது. அந்தச் சின்னங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்த இனத்தினரைச் சேர்ந்த சின்னங்கள் அல்ல என்றும், அதே இடத்தில் கி.மு. 3003-இல் வாழ்ந்த மற்றோரினத்தைச் சேர்ந்தவையே அவை என்றும் அச் சோதனை கன் மெய்ப்பித்தன. அப்பொழுது தொல்பொருட் கலைஞர்கள் பெற்ற வியப்பிற்கும் அடைந்த பரபரப்பிற்கும் எல்லையே இல்லை. இதனால் அப்பகுதியைப்பற்றி வரலாற்றறிஞர் கள் செய்து வைத்திருந்த குறிப்புகளைப் பெரிதும் மாற்ற வேண்டியதாயிற்று. காலத்தை அறுதியிடும் செயலில் கரி.14 பல பூட்டு களுக்குப் பொருந்தும் ஒரு திறவுகோலாகும். இச் சோதனை மிகவும் முக்கியமானது என்பதையுணர்ந்த 52. Sèsi lių gästauff-Red Indians.