பக்கம்:அறிவியல் விருந்து.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவிைலி உணம் 165 உளவியலறிஞர்கள் அனைவரும் ஒருமனத்துடன் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த உளநிலைகளை விளக்குவதற்கு வில்லியம் ஜேம்ஸ்" என்ற உளவியலறிஞர் ஒர் அரிய உவமையைக் கையாளுகின்றார். வடபெருங்கடலி னின்றும் பெரும் பனிக்கட்டி மலைகள் விடுபட்டு அட் லாண்டிக் மாபெருங் கடலில் புகும். இம்மலைகளின் கொடுமுடிகளின் எட்டில் ஒரு பகுதியே புறத்தே புலனா கும். பனிக்கட்டி மலையொன்றினை முழு உளத்துடன் ஒப்புமைப்படுத்திக் கூறும்பொழுது சிறிதளவு தோன்றும் கொடுமுடியை தனவுள்ளத்தோடு ஒப்புமை கூறலாம். அங்ங்ணம் நிலையாகத் தோன்றிக் கிடக்கும் பகுதிக்குக் கீழேயுள்ள சிறு பகுதி சுற்றியுள்ள அலை வீச்சினால் தோன்றியு: வரும். இதனை நனவடியுளத்துடன் ஒப்புமை கூறலாம். இதற்குக் கீழாகப் பெருமலை போல் கிடக்கும் பகுதி தாக்கினால், பெருங் கப்பல்களும் அச்சு வேறு ஆணி வேறாகச் சிதையக் காண்கின்றோம். இதனை நனவிலியுளத்திற்கு ஒப்பிடலாம். நனவு உளம் முழு உளத்தில் கோடியில் ஒரு பங்கே என்றும் கூறிவிட லாம். புறக்காற்றாலும் பிறவற்றாலும் இந்தப் பணிக்கட்டி மலை தலைகீழாகப் புரளுவதும உண்டு. அதுபோலச் சில சமயம் நனவிலி யுளமும் நனவு உளமாக மாறுவதும் உண்டு. இத்தகைய உளமாற்றம் சிறுகச் சிறுகவும் எழலாம்; திடீர் என்றும் நேரிடலாம். எப்படிப் பனிக்கட்டி மலையின் பெரும்பகுதி புறத்தே புலனாகாமல் நீரின் அகத்தே ஆழ்ந்துள்ளதோ, அதேபோன்று நனவிலி யுளமும் உள்ளே ஆழ்ந்துள்ளது. எங்கனம் புறத்தே புலனாகும் பனிக்கட்டிமலைக்கு நீரின் அகத்தே ஆழ்ந்துள்ன பகுதி அடிப்படையாக உள்ளதோ அங்கணமே நனவிலி 8. sistä estulò Gegł civ-William James. 9. வடபெருங் கடல்:Arctic ocean