பக்கம்:அறிவியல் விருந்து.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} அறிவியல் விருந்து டைட்டானியம் என்பது 6 பங்கு; இது மண்ணிலும் மணவிலும் காணக்கிடக்கின்றது. குளோரின் என்பது 2 பங்கு; இது சோற்றுப்பில் சோடியத்துடன் சேர்ந்து சேர்க் கைப் பொருளாகக் கிடக்கின்றது. பாஸ்வரம் ஒரு பங்கு கருவிற்கு இன்றியமையாத பொருள் இஃது. இந்தப் பன்னிரண்டு பொருள்களே உலகில் 991 பங்கானால் மிகுந்து நிற்கும் 80 அடிப்பொருள்களும் (தனிமங்களும்) 9 பங்கு அனவே இருக்கக் காண்கின்றோம். பண்டையோரின் வேதியியல் அறிவு:ஆதியில் இயற்கை ைஆராயத் தொடங்கின மனிதனுக்கு ஒர் உண்மை புலப் பட்டது. ஒன்றாய் இருந்த விதை பின் வேராய், அடிமரமாய், கிளை பாய், கொம்பாய், கவடாய், இலையாய், பூவாய், காயாய் என்று பலவகையாய் மாறுவது போலவே வித்தென அருவமாய் இருந்தவை மரம் என உருமாறியது என்று அவன் நினைத்தான், இக்கொள்கைக்குப் பரிணாமவாதம் என்து பெயர்; கூர்தல் அறம் என்றும் இதனை வழங்குவர். உலகில் எதனை அடிப்படை என்பது? மண் என்றனர் சிலர்: நீர் என்றனர் பிறர்; தீ என்றனர் ஒரு சாரார்; காற்று என்றனர் பிறிதொரு சாரார்; வேறு சிலர் வான் என்றனர். இந்தச் சண்டையில் கலந்து கொள்ள அஞ்சிச் சிலர், தென் காசி வழக்காக, ஐந்தும் அடிப்படை என்றனர். இத்தகைய கொள்கையை வற்புறுத்தியவர் அரிஸ்டாட்டில் என்பார். தொல்காப்பியமும், "நிலம்தி நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’’’ என்று கூறினர். இதனையே கம்பநாடரும், 5. தொல், பொருள். மரபி, 91.