பக்கம்:அறிவியல் விருந்து.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அளப்பரிய ஆற்றல் 3} 'பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்" என்று கூறுவர். அரிஸ்டாட்டிலின் கொள்கைப்படிநான்கோ, ஐந்தோ தனிப் பொருள்கள்; தனிமங்கள். மற்றவை யாவும் தனிமங்கள் பலவகையாகச் சேர்வதால் உண்டாகும் சேர்க் கைப் பொருள்கள். இப்படிக் கலப்பதனைப் பஞ்சிகரணம்’ என்று வேதாந்தம் கூறும். அவ்வாறு கலக்கும் பொருள்களை அறிவியலார் தனிமங்கள் என்று பேசுவர். தத்துவம் அறிவியலாதல்: பொருள்களை ஆக்கும் அடிப்படையான துகளே அணுவாகும். இந்த உலக மும் இதனையொத்த வேறு அண்டங்களும் அணுவினால் ஆகியவையே. பூக்கள் சேர்ந்து பூமாலை யாதல்போல் அணுக்கள் சேர்ந்து அண்டமாகின்றன. பழங்கால அணு வாதம் இதுதான்.சமண சமயம் பேசியது இந்த அணுக் கொள்கையையே. நியாய மதம், வைசேடிக மதம் என்ற சமயங்களும் இதனையே கூறின. பஞ்சபூதங்களைப் பற் நிப் பேசினால் அவையும் அணுக்களே என்று வாதம் செய்யப்பெற்றது. அணுக் கொள்கையை வற்புறுத்திய வைசேடிக மதத் தலைவரான கணாதருக்கு அணு விழுங்கி யார்” என்ற மற்றொரு பெயரும் வழங்கியமை ஈண்டுச் சிந்திக்கற்பாலது. மேலை நாட்டிலும் டெமாகிரிட்டஸ் என் பாரும் இக்கொள்கையையே முதன்முதலாக எடுத்துப் பேசினார்; இவர்தாம் மேலைநாட்டு அணுக் கொள்கையின் தந்தையார். எபிகுயூரியஸ்-சம் இக்கொள்கையினரே. லூக்ரீஷியஸ் என்ற இலத்தீன் பாவாணர் அணுக் கதை யினையே இயற்கையின் இயல்பு என்ற தம்முடைய தத்துவக் காப்பியத்தில் அமைத்துப் பாடியுள்ளார். அறி வியல் தோன்றியதும் அறிவியல் அறிஞர்கள் வேதியியல் 3. கம்பரா. சுந்தர. காப்பு.