பக்கம்:அறிவியல் விருந்து.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறிவியல் விருந்து திகழ்ச்சிகளை விளக்குவதற்கு அணுக் கொள்கையைப் பயன்படுத்தத் தொடங்கினர், அணுக் கொள்கை தத்துவ நிலையிலிருந்து அறிவியல் நிலைக்குத் திரும்பியதும் அது வியத்தகு மாற்றம் அடைந்தது. டால்ட்டன் காலத்தில் அணு அழியாதது, பிரியாதது, என்றும் உளதாவது என்ற கொள்கை நிலவியது. ஆனால், இன்று அக்கொள்கை "பொய்யாப், கணவாய், பழங்கதையாய் மெல்ல மெல்லப்’ போய்விட்டது. ஏன்? கம்பநாடன் வாழ்ந்த காலத்திலேயே அணுவைக் கூறிட முடியும் என்ற கருத்து முகிழ்த்திருந்தது. "சாணினும் உனன்ஒர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோனினும் உளன்மா மேருக் குன்றினும் உளன்;இந் நின்ற தூனினும் உளன்;நீ சொன்ன சொல்லினும் உளன்;இத் தன்மை காணுதி' என்று இரணியனுக்குப் பிரகலாதன் கூறுவதாக அமைந்த பாடவில் இதனைக் காணலாம். அனுவின் அமைப்பு: அண்டத்தில் போலத்தான் மீண்டத்திலும் என்பது தமது நாட்டில் வழங்கிவரும் ஒரு பழமொழி. இந்தப் பழமொழியின் உண்மை அணு ஆராய்ச்சியில் புலனாவதை அறிந்து மகிழலாம். அண்டங் களின் அமைப்பைப்பற்றி நாம் அறிந்துள்ளதை நினைப் பூட்டிக்கொண்டால் அணுவின் அமைப்பு தெளிவாக விளங்கும். வான வெளியில் எண்ணற்ற அண்டங்கள் தொங்குகின்றன என்று அறிவியலறிஞர்கள் கூறுவர். இதனைத்தான் மணிவாசகப் பெருமானும், 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி "η ακς"κακτων» κατανγκνω κκκικ»στικws...ν-κκινωνw