பக்கம்:அறிவியல் விருந்து.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அளப்பரிய ஆற்றல் 33 ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.' என்று கூறிப் போந்தார். வானத்திலுள்ள கதிரவன் மண்டலத்தில் நாம் என்ன காண்கின்றோம்? நடுவில் கதிரவன் இருக்க, அக்கோளைச் சுற்றிப் பலப்பல மண் டலங்களில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்ட்யூன், புளுடோ முதலிய கோள்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. இந்தக் கதிரவன் மண்டலத் தைப் போலத்தான் அனுமண்டலமும் அமைந்துள்ளது. அணுவின் நடுப்பகுதியைச் சுற்றிப் பல வட்டங்களில் மின்துகள்கள் இடைவிடாது சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளன. இதனைக் கருத்திற் கொண்டுதான் பாரதியாரும், 'இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்' என்று கூறினார். அறிவியலறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மையினைக் கவிஞர் பரஞ்சோதியார், 'அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும் அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னாலும் அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர்' 9. திருவாச. திருவண்டப் பகுதி-அடி (1.4) 10. பாஞ்சாவி சபதம்-செய், 206, 11. திருவிளையாடல்-பாயிரம்-செய். 6