36 அறிவியல் விருந்து ஆனால், அதன் அணுநிறை 238. ஆகையால் அதில் 92 தேர்இயல் மின்னிகளைத் தவிர 146 (238-92=146) பொது இயல் மின்னிகளும் உள்ளன. இக்கருவினைச் சுற்றி 92. எதிர்மின்னிகள் சுழல்கின்றன. இதனைப் பெட்ரண்ட் ரஸஸ் என்ற அறிஞர் வேடிக்கையாகத் துருக்கி மன்னரைச் சுற்றி அவருடைய 92 மனைவிமார் நடனமாடுவதைப் போலுள்ளது என்று உரைப்பர் ஒருநாள் கண்ணன் கோகுலத்திலுள்ள கோயிகையர்களுள் 92 பேரைத் தேர்ந் தெடுத்துப் பிருந்தாவனத்தில் நடனமாடினதைப் போன் துள்ளது என்று நாம் உரைப்பின் அது மிகப் பொருத்தமாக அமையும்! வேதியியல் மாற்றத்தில் அணுத்திரளைகள் உடைபட்டுப் பிரிந்து வேறு வகையான அமைப்பினைப் பெற்று வேறுவகையான அணுத்திரளைகளாக மாறுகின் றன. சோற்றுப்பு என்பது சோடிய அணுத்திரனைகளும் குளோரின் அணுத்திரளைகளும் வேதியியல் மாற்றத்தால் ஒன்றுசேர்ந்த சேர்க்கைப் பொருளாகும். வேதியியல் மாற்றத்தில் வெப்பம் வெளிப்படும். கரியும் உயிரியமும் சேர்ந்து கரியமிலவாயுவாக மாறுங்கால் வெப்பம் வெளிப் படுவதனைக் காணலாம். கரியில் நம் கண்ணுக்குத் தெரியா மல் உறைந்து கிடந்த வெப்பம் வேதியியல் மாற்றத்தின் போது வெளிப்படுகின்றது. இந்த வெப்பம் தாவரங்கள் நேராகக் கதிரவனிடமிருந்து பெற்றதாகும். விலங்கு, பதவை முதலியவைகளும் நாமும் கதிரவனுடைய ஆற் றலை நேரடியாக வாங்கிக்கொள்ள முடிவதில்லை; இதனை விழுங்கிய செடிகொடிகளையும் வித்து, கிழங்கு போன்ற தாவரப் பொருள்களையும் விழுங்கியே அவ்வாற்றலைப் யேற முடிகின்றது. அணுவில் அடங்கியுள்ள ஒளி: அணுக்கட்டில் பரிதிய அணுக்கட்டே வலிவான கட்டாகும். மேலே போகப்போக அணுக்கட்டு இவ்வளவு வலுவாக அமைவதில்லை.
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/24
Appearance