பக்கம்:அறிவியல் விருந்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಫಿಜಿ அறிவியல் விருந்து ஒரு மானிடக் குழவி பல்வேறு சாத்தியக் கூறுகளுடன் பிறக்கின்றது என்றும், அது மனிதத் திறன் எல்லைக்குள் அடங்கிட எந்த விதமான துலங்கலுக்கும்" உட்படக் கூடியது என்றும் சூழ்நிலைக் கட்சியினர் கூறுவர். சாதகமான வாய்ப்புகள் இருப்பின், மனிதன் இதுகாறும் சாதித்தவற்றையெல்லாம் ஒருவன் சாதிக்க முடியும். மேதைத் தன்மை என்பது முட்டாள் தனத்தைப்போலவே சூழ்நிலையின் விளைவே யாகும். குழந்தையின் மனம் களிமண்ணைப் போன்றது; சூழ்நிலை அதற்கு எந்த வடிவத்தை வேண்டுமானாலும் அமைக்கலாம். லாக்கே" என்பார் கருத்துப்படி அதனை ஒரு தூய்மையான கற்பலகைக்கு ஒப்பிடலாம்; அநுபவங்கள் யாவும் அதில் பதிகின்றன. இக்கட்சியினர் பாபர், சிவாஜி முதலியோரின் எடுத்துக்காட்டுகளில் அவர்களுடைய முன்னோர்களும் வழித்தோன்றல்களும் ஏன் அவர்களைப்போல் அருஞ் செயல்களையும் திறமைகளையும் காட்டவில்லை என்று வினவுகின்றனர். இவர்கள் யாவரும் தாம் வாழ்ந்த காலத் திலுள்ள சமூக, பொருளாதார, அரசியல் செல்வாக்கு களால் தாக்குண்டவர்கள்; இவர்கள் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருந்தால் அங்ங்னம் அவர்கள் திகழ்ந் திருத்தல் முடியாது. சூழ்நிலை, பயிற்சி, கல்வி, அதுபவம் ஆகியவை மனிதனை எங்ங்ணம் ஆக்குகின்றனவோ அங்கனமே அவனும் வளர்கின்றான் என்பது இவர்கள் கூறும் வாதமாகுல். ஆகவே, கல்வி என்பது ஒருவரது உள, ஒழுக்கச் செயல்களின் திரட்சி யாகும். ஒரு காலத்தில் காட்டு மிராண்டி யாக வாழ்ந்த மனிதன் பெரும்புகழ் வாய்ந்த 8, govtågå-Response. 9. offégs-Locke.