பக்கம்:அறிவியல் விருந்து.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 45 பண்பாடு, கலை, அறிவியல், மெய்ப்பொருளியல், சமயம், சமூகம் போன்ற துறைகளை அநுபவத்தாலும், கற்ற லாலும், கல்வியாலும், பயிற்சியாலுமே வளர்த்துள்ளான் என்பதற்கு நாகரிகத்தின் வரலாறே சான்றாக நிற்கின்றது. அவனுடைய நற்பேற்றிற்குக் குடிவழியே முதற்காரணமாக இருந்திருப்பின் அவன் இருபது நூற்றாண்டுகட்கு முன்னிருந்த நிலையிலேயே இருந்திருத்தல் வேண்டும். மேலும், வாழ்க்கையில் பழிகளைச் செய்து பாழாகப் போனவர்களும், தக்க ஏற்பாடுகளாலும் வழியமைப்பு களாலும் புதிய முறையில் வாழ்க்கையைத் தொடங்கி நன்னிலையை எய்தியுள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் இல்லாமல் இல்லை. எனவே, சூழ்நிலையே ஒரு மனிதனை ஆக்குகின்றது, அல்லது அழிக்கின்றது; குடிவழி என்பது கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டாத நிழலாகி விடுகின்றது. கல்வியில் இரண்டு கருத்துகளும் செல்வாக்குப் பெற் திருத்தல்: இங்ங்ணம் இருவேறு துருவ எல்லைகளாக முரணி நிற்கும் இந்த இரண்டு கருத்துகளும் பொது மக்களிடையே வேரூன்றியுள்ளன. இக் கருத்துகள் கல்வியைப் பற்றிய ஆசிரியர்களின் மனப்போக்கையும் அறுதியிடுவதால், இவர்கள் குடிவழி சூழ்நிலை ஆகிய இரண்டைப்பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகின்றது. குடிவழியே சிறந்ததெனக் கருதுவோர் கல்வியில் மேற்கொள்ளவேண்டிய முயற்சி யைக் கைவிடுகின்றனர். இதனை அறவே புறக்கணிக் கின்றனர். தாம் எதிர்பார்த்தற்கு மாறாகக் குழந்தைகள் காணப்பெறினும், அக் குழந்தைகளிடம் நற்பழக்கங்களை உண்டாக்கவேண்டும் என்கிற தம் முயற்சி தவறிப் போயினும், குடிவழியே அக்குழந்தைகளின் ஒழுக்கம், ஆ-3