பக்கம்:அறிவியல் விருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢి அறிவியல் விருந்து கற்றல், நடத்தை முதலியவற்றை முன்னரே அறுதியிட் டுள்ளது என்றும், வரக்கூடிய முடிவை மாற்ற முயல்வது விண் என்றும் பழம் பாட்டையே அவர்கள் பாடுகின்றனர். இவர்கள் தம்மிடம் பயிலும் மானாக்கர்களின் மேம்பாட்டில் (improvement) தம்பிக்கை இழக்கின்றனர்; அம் மாணாக்கர் கள் வகுப்புப் போதனையில் ஏதாவது பெற்றுத் தொலையட்டும் என்று வானா இருந்துவிடுகின்றனர். சில ஆசிரியர்கள் இம்மாணாக்கர்கள் தம் வகுப்பின் நிலை யையே' குறைத்து விடுகின்றனர் என்ற குறையையும் கூறி, "அவரை போட்டால் துவரை முளைக்காது என்பது உறுதி' என்ற சமாதானமும் கூறுகின்றனர். அவரை போட்டால் துவரை முளைக்காது என்பது உண்மைதான்; ஆனால், தக்க முறையில் சூழ்நிலையைக் கவனித்தால் சிறந்த அவரையையே உண்டாக்குதல் முடியும்; தக்கவாறு கவனித்தால் துவரை விளைச்சலையும் அதிகரிக்கச் செய்தல் இயலும். மாணாக்கர்களின் இயல்புகள் வெவ்வேறாக உள்ளன என்பதும், இவற்றின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட திட்டமான போக்கிலேயே வளர்கின்றன என்பதும் உண்மையே. ஆனால், இப்போக்கில் வளர்ச்சி பெறுவதில் மேம்பாடு அடையச் செய்வதும், குடிவழி வந்த முதலைச் சிறந்த முறையில் கையாளுவதும் நம் கையில்தான் உள்ளன. கவனமாக எருவிடுதல், புலத்தைத் தக்க முறையில் ೬೯೯ படுத்தல், நீர் பாய்ச்சும் முறையில் மாற்றம் செய்தல் போன்ற அறிவியல் முறைச் சாகுபடியால் விதைகள் செழித்து வளர்கின்றன; உயர்ந்த பலனையும் தருகின்றன. கதிரியக்க ஓரிடத்தான்கள் * உழவுத்துறையில் வியத் தகு பலன்களைத்தருகின்றன என்பதை மேனாட்டுப் பயிர்த் i<^. fflES sv-Standard. 11. கதிரியக்க ஓரிடத்தான்கள்-Radio-isotopes,