பக்கம்:அறிவியல் விருந்து.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அறிவியல் விருந்து சிறந்த முறையில் கல்வி புகட்டினாலும் பயிற்சியளித் தாலும், தக்க சூழ்நிலையை அளித்தாலும் குடிவழியால் கைவரப்பேறாத கவர்ச்சிகளையும் திறன்களையும் உண் டாக்க முடியாது. ஒவியம் தீட்டும் திறனோ அன்றி இசையில் ஈடுபடும் திறனோ வாய்க்கப்பெறாத ஒருவன் என்னதான் முயன்றாலும், அக்கலைகளில் சிறந்த வல்லுநர்களாலும் அக் கலைப் புலமையை அவரிடம் உண்டாக்க முடியாது. சிவனிடம் தன் முடைய செல்வாக்கால் கணிசமான அளவு கூடப் பலனை உண்டாக்க முடிவதில்லை. இது கழுதையைக் கட்டி ஹோமம் வளர்ப்பது போன்ற செயலாக முடியும்; ஆப்பு தாயை வெள்ளை நாபாக்க முடியாது என்பதை இராயருக்கு எடுத்துக்காட்டத் தெனாலிராமன் மேற் கொண்ட சோதனை கண்டு தினைவு கூர்தற்பாதுை. ஆனால், கல்வியால் ஏற்கெனவே அமைந்து கிடக்கும் இதனைத் தேர்ந்தெடுத்து, இதனைத் துரண்டி வளர்க்க முடியும்; அது முழு வளர்ச்சியையும் பெறுவதற்குப் பாதக மான வாய்ப்புகள் யாவற்றையும் கலந்து சாதகமான வாய்ப்புகள் அனைத்தையும் இந்து துலக்கமடையச் செய் பலாம். இந்த உலகில் ஒவ்வொரு வகைத் திறனுக்கும் ஒவ்வொரு நிலையிலுள்ள திறனுக்கும் ஒர் இடம் உண்டு. அறிவுடைய கல்விமுறையால் இவற்றை இளமையிலேயே ஆராய்ந்து இவை சிறந்த முறையில் துலக்கமுறுவதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் அளித்தல் ஆட்சியாளரின்கடமை; அதற்கு இணைந்து துணைநின்று பணியாற்றுவது ஆசிரி பரின் பொறுப்பு. ஆளுமை வளர்ச்சியே நாட்டு வளர்ச்சி. சட்டத்தின் முன்பு எல்லாரும் சமம் என்பதே குடியரசின் உயிர் நாடி . உண்மை நிலை மேற்கூறிய இருவேறு கருத்துகளையும் அறிவியல்முறையில் வைத்து ஆராயின் உண்மை நிலை புலனாகும்; குடிவழியும் சூழ்நிலையும் ஒன்றோடொன்று