பக்கம்:அறிவியல் விருந்து.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 4% முரண்பட்ட விசைகள் (Forces) என்று கொண்டது தவறா னது என்பது தெளிவாகும். உண்மையில் இவை விசைகளு மல்ல; தம்முள் தாம் முரணியவையும் அல்ல. குடிவழி வன்மையுடையதா, சூழ்நிலை வன்மையுடையதா என்பது பிரச்சினையன்று. இந்த இரண்டு சொற்றொடர்கள் குறிக் கும் வாழ்க்கையின் இரண்டு கூறுகளும் பிரிக்க முடியாதவை: ஒன்றோடொன்று இணைந்து பிணைந்து நிற்பவை. ஒன்றைப் புறக்கணித்தால் மற்றொன்றுக்குப் பொருளே இல்லை. இத்தகைய பிரச்சினையே-ஆயப்படுபொருளே (issue)-இல்லை என்பதை முதலில் நாம் அறிதல் வேண்டும். வளரும் ஒவ்வோர் உயிரியும்(Organism)-தாவரம், பிராணி, மனிதன் ஆகியவற்றுள் எதுவாயினும்-குடிவழியும் அன்று; அல்லது சூழ்நிலையும் அன்று; இது குடிவழியும் சூழ்நிலையும் கலந்த தொன்று இது விடுதலையுடன் இயங்கும் படைப்புச் செயல்; இது தானே உருவாகித் தானாக வளர்வது. இது வளர்வதற்குக் காரணம் குடிவழியாகப் பெற்ற இயல்பான திறனும் சூழ்நிலையுமே, இது வளர்வதற்குக் குடிவழியும் சூழ்நிலையும் இணைந்து செல்வதுடன் இடைவினையும் புரி கின்றன. எனவே, கல்விக்கும் சமூகத்திற்கும் முன்னிற்கும் பிரச்சினை வாழ்க்கையின் இந்த இரு கூறுகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பது அன்று. ஒவ்வொரு குழந்தைக்கும் எந்த அளவுக்குத் தக்க சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க முடியும் என்பதே நாம் செய்யவேண்டுவது. இதனால் இக் குழந்தை குடிவழியே பெற்ற தன்னுடைய இயற்கைப் பேறு முழுவதிலும் அமைந்து கிடக்கும் மதிப்பு அனைத்தையும் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. இதுவே குடியரசு நாடுகளின் முக்கிய பொறுப்பு என்பதை நாம் மறத்தலா காது, ஒரு தாவரத்தின் வளர்ச்சியில் விரையில் பங்கையும் மண்ணின் பங்கையும் அறிந்தால் குடிவழிக்கும் சூழ்நிலைக் ബ്

  • விரை - வித்து: விரை - மணம்; மனத்தைத் தரும் பூவிலுள்ள பொடி,இதுதான் தாவரத்தின் ஆண் உயிரணு; இதுவே முட்டையணுவுடன் சேர்ந்து வித்து ஆகின்றது; எனவே விசை வித்தினைக் குறிக்கின்றது. т.