பக்கம்:அறிவியல் விருந்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அறிவியல் விருந்து கும் உள்ள உறவுமுறை தெளிவாகும். விரையினுள் அது ஒருவகைத் தாவரமாக வளரும் ஆற்றல் அடங்கியுள்ளது. அது நல்ல முறையில் வளர்வதும், நன்றல்லாத முறையில் வளர்வதும் அஃது அடையும் மண்ணைப் பொறுத்துள்ளது. அது பாறையில் விழுந்தாலும் வெயிலில் விழுந்து தீய்ந்து போயினும் அல்லது நசுக்குண்டாலும் முளைப்பதில்லை அதிகமான நீருள்ள அல்லது வறட்சியையுடைய வளமற்ற மண்ணில் விழுந்தால் முளைக்கும்; ஆனால் நீண்ட காலம் வாழாது, அல்லது பலன் தராது; கோயில் போன்ற கட்டிட இடுக்குகளில் விழுந்தால் என்ன நேரிடும் என்பதை நாம் அறிவோம். நல்ல நிலத்தில் வீழ்ந்து உரம், நீர் வெயில் போன்ற சாதகமான தல்ல நிலைமைகளைப் பெற்றால், அஃது ஒரு சிறந்த தாவரமாக வளரும், நிறைந்த பலனை யும் தரும். தாவர வளர்ச்சிக்கு விரையும் வேண்டும்; மண்ணும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன் நால் வளர்ச்சி என்பதே இல்லை. இரண்டும் தனியாகவும் செயற்பட முடியாது; இரண்டும் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. இவ்வாறே ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் குடி அழியும் சூழ்நிலையும் இன்றியமையாத பங்கினைப் 3. - wr 4 பெறுகின்றன. தாவர உலகைவிட்டு மக்கள் உலகிற்கு வருவோம். ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஏதாவது ஒரு திறமை, குடிவழி ாேக வந்ததா, சூழ்நிலையால் அமைந்ததா என்பதை * துதியாகச் சொல்ல இயலாது. ஓர் இசைக் கலைஞரின் ఓట్లో ఫ్ట இசைப்புலவனாகத் திகழ்ந்தால், குடி வழிதான் காரணம் என்று உறுதியாக அறுதியிடுவது சரியன்று. அவகு டைய தந்தையைப்போலவே அவரும் சூழ்நிலையில் கிடைத்த பல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டதால் அத்திறனைப் பெற்றிருக்கலாம். இசைப்புலமை ஒரு தலை முறையில் சிறிதுகால வாழ்க்கையில் பழகியதனால் குடி