பக்கம்:அறிவியல் விருந்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அறிவியல் விருந்து "நீனிறப் பெருங்கரி நிறைத்த நீர்த்தெனச் சூனிற முசிற்குலத் துவன் றிச் சூழ்தினை மானிற நெடுங்கடல் வாரி மூரிவான் மேனிறைத் துளதென முழக்க மிக்கதே. மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை யாதினு மிருண்டவிண் இருந்தைக் குப்பையிற் கூதிர்வெங் கால்நெடுந் துருத்திக் கோளமைத்(து) ஊதுவெங் சனல் உமிழ் உலையும் ஒத்ததே." (கரி - யானை, சூல் - கரு; முகில் மேகம்; துவன்றி. நிறைந்து, நெருங்கி; வாரி - நீர்; மூரி - பெரிய. மாதிரம் - திசை சருமான் - கொல்லன்; இருந்தைக் குப்பைகரிக் குவியல்; கால்-காந்று; உலை- உலைக் களம்.) என்று அவற்றை வருணித்திருத்தலைக் காண்க. நீரை புண்ட முகிற்கூட்டங்கள் நீலநிறத்தையுடைய களிற்றி யானை திரைகள் திரண்டு நின்ற தன்மையைப் போன்று தெருங்கி நிற்கின்றன. இது சுழன்று சுழன்று அடிக்கும் அலைகளையுடைய கருநிறப் பெருங்கடல் விசும்பெங்கும் பரவினாற்போல் மிக்க முழக்கத்தைச் செய்கின்றன. இஃது இடி முழக்கம். இருண்ட வானம் திக்குகளாகிய கருமான் காளமேகமாகிய கரிக் குவியலில் கூதிர்வாடையாகிய துருத்தியைக் கொண்டு மின்னல்களாகிய தீச்சுவாலைகளை வெளிப்படுத்துவதான உலைக்சளத்தை ஒத்திருந்தது. இது மின்னலின் தோற்றம். இங்ங் ைம் கம்பநாடன் கார்காலத் தோற்றத்தை தமக்குக் காட்டுவான். தம்முடைய பண்டையோர் மேகம், மழை, இடி, மின்னல் முதலியவை இந்திரனால் உண்டாகின்றன் என்று கருதி வந்தனர். இதனால்தான் அவனுக்கு மேகநாதன்' 2. கம்கரா. கிட்கிந்தை-கார்காலப்6, 8.