பக்கம்:அறிவியல் விருந்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலும் இடியும் 55 என்ற மற்றொரு பெயரும் வழங்குகின்றது. இங்ங்ணமே பண்டைய கிரேக்கர்களும் உரோமானியரும் முறையே தங்களுடைய பேராற்றல் வாய்ந்த ஹெஃபேஸ்டஸ்,’ வல்க்கன்" என்ற தேவர்கள் தத்தம் தேவலோகப் பட் டறையில் இடியையும் மின்னலையும் உண்டாக்குகின் றனர் என்றும், கிரேக்க ஜீஸ்-சம் உரோமானிய குருவும்" இந்த இடியேறுகளைத் த த் தம் பகைவர்களின்மீது சுழற்றி வீசி எறிகின்றனர் என்றும் நம்பி வந்தனர். ஆயின் இத்தகைய கருத்துகள் இன்று பொய்யாய்ப் பழங்கதை களாகப் போய்விட்டன. இக்கால அறிவியல் இவற்றிற்குப் புதிய விளக்கம் தருகின்றது. கார்காலத்தில் கருவி வானத்தை நாம் அண்ணாந்து உற்றுநோக்கின் பல்வேறு வகை மின்னல்களைக் கண் னுறலாம். கொடிபோலக் கிளைகிளையாக இடப்புறமும் வலப்புறமுமாக மாறிமாறி வளைந்து வளைந்து சங்கிலி போலச் செல்லும் ஒருவகை மின்னலைக் காண்கிறோம். இது சங்கிலி மின்னல்’ என்று வழங்கப்பெறும். யாதொரு வடிவமுமின்றி அடிவானம் முழுவதும், பளிச் பளிச்" என மின்னும் மற்றொரு வகை மின்னல் தகட்டு மின்னல் எனப்படும். சங்கிவி மின்னல் அடிவானத்திற் கப்பால் மிகத் தொலைவில் தோன்றுவதனாலேயே இத் தகட்டு மின்னல் தோன்றுகின்றது. கோடைக் காலத்தில் மாலை நேரத்தில் இடியின்றித் தோன்றும் தகட்டு மின்னலைப் போலவே தோன்றுவது வெப்ப மின்னல்’ என்று கூறப் பெறும். இந்த வகை மின்னல் அதிக ஒளியின்றிச் 3. Q3,03%Gusivi civ-Haphaestus. 4. @1&&&går-Vulcan, 5. §am-v-Jeus. 6, 6565-Jupiter.