3š அறிவியல் விருந்து சிந்து மங்கலாகவே இருக்கும். இவை யாவற்றையும் விட வியப்பானது பந்து பின்னல்’ என்ற வகையாகும். பந்து போன்ற தீக்கோளம் ஒன்று பலூன் அளவினதாக முகிலி இனின்றும் சிறிது சிறிதாக மெதுவாகக் கீழிறங்கி வந்து பூமியில் விழுந்து உருண்டோடி ஏதாவது ஒரு பொருள் எதிர்ப்பட்டால் அதனுடன் மோதி வெடிக்கும்; அல்லது பூமியில் மோதியவுடனேயே வெடித்துவிடும். இவ்வகை மின்னலைப்பற்றி இன்று அறிவியல் அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர். இன்று நாம் மின்னலைக் கண்டு அஞ்சியபோதிலும் அதில் தெய்விகக் கூறு” ஒன்றுமில்லை என்பதை அறி வோம். விரைவாகத் தொடர்ந்து செல்லும் மிகப் பெரிய மின்பொறிகளே மீன்னவாகும் என்று விளக்குவர் அறி வியலறிஞர்கள். குளிர் காலத்தில் நம்முடைய காலடிகள் கம்பள விரிப்பில் தேய்க்கப்பெற்ற பிறகு நாம் கதவு கன்னத் திறக்குங்கால் நம்முடைய விரலினின்றும் கதவுக் குமிழ்களுக்குத் தாவிச் செல்லும் மின் பொறியைப் போன்றவையே இப்பொறிகள். மின்னலையும் இடியை அம்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமாயின் அணுவைப் பற்றிய அறிவு நமக்கு ஒரளவு இன்றியமையாதது. ஒவ் வோர் அணுவும் ஒர் உட்கருவினையும் அதனைச் சுற்றி அயனப் பாதைகளில் சுழன்று வரும் மின்னணுக்களை பும் கொண்ட கண்ணுக்குப் புலனாகாத துண்ணிய சிறு துகளாகும். மின்னணுக்கள் எதிர்மின்னூட்டம் உடை யவை. அணுவின் வகைக் கேற்ப இந்த மின்னணுக்கள் ஒன்றிலிருந்து சுமார் அறுவரை எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டே போகும். தாமிரம், வெள்ளி போன்ற உலோகங்களில் வெளிப்புறமாகவுள்ள வட்டப் பாதைகளி 7. Lôāras goiásár. Electrons.
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/44
Appearance