மின்னலும் இடியும் 5% பெற்று ஒரு மின்பொறி அல்லது தொடர்ச்சியான பல மின்பொறிகளை விளைவித்தல் கூடும். ஒரு மின்வெட்டில் ' பங்குபெறும் ஆற்றல் 100,000,000 வோல்ட்டுகள் ஆகும்; அதற்கு மேலும் ஆகலாம். மேலே கூறியாங்கு ஒரு மின்வெட்டு இவ்வளவு எளிய முறையில் தோன்றுகின்றது என்று கருதுதல் வேண்டா, உண்மையில், இச்செயல் மிகச் சிக்கலானது.ஒரே மேகத்தில் பல்வேறு மின்னூட்டங்களுள்ள பல பகுதிகள் இருக்கலாம். மின்வெட்டுகள் ஒரு மேகத்திற்கும் பிறிதொரு மேகத்திற்கும் அல்லது ஒரே மேகத்தில் பல பகுதிகட்கிடையிலும் நிகழ லாம். இவ்வகை மின்னல் இருதுை மைல் நீளம் வரையிலும் இருக்கலாம். இது மேகத்திற் கும் மேகத்திற்குமிடையே தோன்றும் மின்னலாகும். மின்னேற்றமடைந்த இடிமேகம் பூமிக்கு அருகில் வருங்கால் பூமியின் பரப்பில் எதிர் மின்னேற்றம் உண்டாகின்றது. இடையிலுள்ள காற்று காப்புறைபோல் இருந்து இரு எதிர்மின்னேற்றங்களும் மோதிவிடாமல் பாதுகாக்கின்றது. ஆற்றல் காற்றினால் காக்க முடியாத நிலை ஏற்படுங்கால் இடி மேகத்திற்கும் பூமிக்கும் இடையேயுள்ள எதிர்மின்னேற்றங் காரணமாகப் பொறி தோன்றுகின்றது. இதுவே மேகத்திற்கும் பூமிக்கும் இடையே தோன்றும் மின்னலாகும். இவ்வகை மின்னல் ஒரு மைலுக்கு மேலான நீளம் இருக்கலாம். மேற்குறிப்பிட்டவாறு மேகங்களுக்கிடையே தோன்றும் மீன்னலால் கேடொன்றும் விளையாது. ஏனெனில் இவ்வகை மின்னலால் தோன்றும் ஏராளமான மின் னாற்றல் காற்றிலேயே கரைந்து வீணாகி விடுகின்றது. ஆனால், மேகத்திற்கும் பூமிக்கும் இடையே தோன்றும் மின்னலால் உண்டாகும் மின்னாற்றல் முழுவதும் பூமி 10. Wörðsul-Q-Lightning flash,
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/47
Appearance