பக்கம்:அறிவியல் விருந்து.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ அறிவியல் விருந்து அடிக்கடி நிகழக்கூடியது) அதைச் கற்றிப் போதுமான இக்கோட்டக் கொண்டுசெல்லப்பெறும், இஃது ஒரு” ஊறு செய்வதற்குப் போதுமானது. அவர் நீந்திக் கொண்டிருக்கும்பொழுது மின்வெட்டு ஆபத்தினை விளை விக்கக்கூடியதாக இராதிருப்பினும் அவர் திடீரென்று மூர்ச்சையாகி மூழ்கிவிடுவார். இடிமழிை பெய்துகொண்டிருக்கும்பொழுது துளி களாக நீர் பொழியும் சாதனத்தின் கீழிருந்து நீராடுவதும் விபத்தினை விளைவிக்கக்கூடியதே. அக் கட்டடத்தில் யாதாவது ஒரு பக்கத்தில் தாக்கும் மின்னல், நீர் வரும் குழல் வழியாக ஒடி நீராடிக்கொண்டிருக்கும் மனிதரின் உடலில் இறங்கிவிடும்; அதனால் அவர் உயிரை இழக்க தேசிடும். இடிமழை நேரிடுங்கால் இன்றியமையாத தேவைக்கு மேல் மின்சாரத்தாலான சாதனத்தைப் பயன்படுத்த ஆம் ஆகாது. காரணம், மின்வீழ்ச்சியினால் உண்டாகும் மின்னோட்டத்தை மின்கம்பிகள் அச்சாதனத்தினருகி லுள்ள மனிதரிடம் கொண்டுசெலுத்துதல் கூடும். இதனால் தாம் மின்விளக்குகளின்றி இருட்டில் இருக்கவேண்டும் என்பது பொருளன்று; விளக்கு எரித்திடினும் எரியா விடினும் ஒன்றுதான். அங்கணமே, வானொலிப் பெட்டி இயங்கிக்கொண்டிருக்கும்பொழுதும் நாம் மின் தாக்குத லால் பாதிக்கப்பெறுவதில்லை. இத்தகைய மழைக் காலத்தில் அட்டிலறையில் இருப்பதும் ஆபத்தானதே. ஏனெனில், மின்னல் புகைப் போக்கிக் குழலின் வழியாக அந்த அறைக்குள் இறங்கி அங்குள்ள மனிதரைத் தாக்குதல் கூடும்; அல்லது புகைப் போக்கிக் குழல் தாக்கப்பெற்று, அறையினுள் ஒளிருக்கும் அனைவரையும் குழலின் கிதை பொருள்கள்